பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————வல்லிக்கண்ணன்

எனக்குப்பதில் எழுத வேண்டாம். நீ செய்வாயென்று எனக்கொரு தீவிர நம்பிக்கை இருக்கிறது. அதே என் உயிர்நாடி, நான் மெய்மறந்து உன்னையே நினைக்கிறேன், ஆனால் நாமிருவரும் இவ்வுடலில் ஸ்திபதிகளல்ல. சரீர இச்சைவேண்டாம். பூர்ணமாக என் ஆகாசத்தில் ஜொலிக்கும் சுகச்சந்திரனுக்குக் களங்கமுண்டாக்காதிரு, சரிதானே?

இப்படிக்கு

நூர் உன்னிஸா

கதாநாயகன் சொல்வதாக அமைந்தகதைமுடிவில் வரும் வரிகள் இவை:

‘என் மனமோகினியின் கட்டளைப் படி நான் உலக வழிகளில் திரிந்து வருகிறேன். நான் செய்யும் காரியங்களிலும் நான் நினைத்த மாத்திரத்தில் என் முன்தங்கப்பதுமை போல வந்து நின்று என்னை உத்ஸாகப் படுத்துகிறாள். என் சோர்விலும் என் மனதின் முன் குதித்துக் கொண்டு வந்து என்னை ஆற்றுகிறாள்.

லைலா மஜ்நூன், ஷெரீன் பர்ஹாத், ரோமியோ ஜூலியட் கதைகள் நமக்குத் தெரியும். இளம்பருவ காதல்நிறைவேறாமல் மனம் முறிந்து சோககரமாக வாழ்க்கை முடிவுகள் அவர்கள் உறவில். அது மாதிரி முடிந்திருக்க வேண்டிய ஒரு சம்பவம்தான் இதுவும், முதலில் காதலுக்கு இடம் இல்லாத காலம். இரண்டாவது, முன் சொன்னவர்களிடையே அந்தஸ்து வித்யாசம். குடும்ப விரோதம் இவை அவர்கள் உறவுக்கு தடையாக நிர்ணயிக்க, இங்கே ஜாதிக்கும் மேலாக மதம் இடையே சுவர் எழுப்பிய நிலை. நடப்பு ரீதியாக பார்த்தால் சாத்தியமே இல்லாதது அன்றைக்கு.

அவர்களின் காதல் சாத்யமாகாதது இருக்கட்டும். அத்தகைய காதல் ஏற்படுவதுக்கான பகைப்புலமே ஏற் பட வழி இல்லாத காலம் என்றும் சொல்வேன். சமுதாயக் கட்டுப்பாடுகள் அவ்வளவு அமுக்கினசந்தர்ப்பம். விதிவிலக்குகள் இருந்ததாஎன்பதுகூட எனக்கு சந்தேகம் தான். கேள்விதான். மலரும் மணமும் பிரச்னைக்கே களம் இல்லாத போது நூர் உன்னிஸா பிரச்னைக்கா வாய்ப்பு? ராமையா, பிச்சமூர்த்திக்கு மேலே ஒரு படி போய்விட்டார்.கு.ப.ரா. தன் கதைக்கு விஷயம் கரு தேர்ந்தெடுப்பதில், கலைஞன் பார்வையிலே கோணங்கள் மதிப்புகள், உணர்ச்சிகள் காலதேச வர்த்தமானத்துக்கு ஏற்ப மாறி வருவதையும் விரிவடைவதையும் நாம் பார்க்கிறோம்.

291