——————————————————————————————எழுத்து - சி.சு. செல்லப்பா
இப்படிஅவர்கள் பேசிக்கொண்டது ஒரு ஓட்டல் வாசலில் சி.க. ஓட்டலைவிட்டு வெளியே வரக்காத்து நிற்க வில்லை செல்லப்பா.
கனகசபாபதி பின்னர் வந்து பேசமுயன்றபோதும், செல்லப்பா அவருடன் பேச மறுத்துவிட்டார். 'ராமையா சிறுகதைகள் பற்றி தரக்குறைவாகப் பேசுகிற ஒருவரோடு எனக்கு நட்பு தேவையில்லை’ என்று உறுதியாகத் தெரிவித்தார் அவர்.
சி. கனகசபாபதி எழுத்துவில் புதுக்கவிதைகளில் தேர்ந்து எடுத்து புதுக்குரல் தொகுப்பாக உருவாவதற்கும், அது மதுரைப் பல்கலைக்கழகத்தில் பாடநூலாகத் தேர்வாகி இடம்பெறுவதற்கும் காரணமாக இருந்தவர். 'எழுத்து'வில் அரிய ஆய்வுக்கட்டுரைகள் எழுதியவர். செல்லப்பாவுக்கு நெருங்கிய நண்பராக இருந்தவர். ஆயினும், ராமையாவின் எழுத்து பற்றி அவர் மாறுபட்ட கருத்து கொண்டிருந்ததை செல்லப்பாவால் மன்னிக்கமுடியவில்லை. அந்த நிகழ்ச்சிக்குப்பிறகு சி. கனகசபாபதியுடன் செல்லப்பா நட்புறவு கொள்ளவேயில்லை.
இதைப்போலவே ஒரு சுவாரசியமான நிகழ்ச்சியை திருப்பூர் கிருஷ்ணன் பதிவு செய்திருக்கிறார். அவருடைய அனுபவம் இது -
அன்று பி.எஸ். ராமையாவைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார். ராமையாவைப் பற்றிச் சொல்லும்போது அவர் முகமெல்லாம் பளபளவென ஜொலிக்கும். ராமையாவிடம் அவர்கொண்டிருந்த அன்பு மட்டுமல்ல, ராமையாவின் இலக்கியத்தின் மேல் அவர் வைத்திருந்த மதிப்பும் கூட விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது.
ராமையா படைப்புகள் அத்தனையையும் ஒன்றுவிடாமல் புத்தகமாக வெளியிட வேண்டும் என்றார் என்னிடம். ராமையா உன்னதமான எழுத்தாளர் என்பதையும், ஆகச் சிறந்த படைப்புகள் பலவற்றையும் எழுதியிருக்கிறார்என்பதையும் நான் மறுக்கவில்லை. ஆனால் குங்குமப் பொட்டுக்குமாரசாமி என்றெல்லாம் அவர் எழுதிய படைப்புகள் சாதாரணமானவை. அவரின் பொருளாதாரத் தேவைக்காக அவர்எழுதிக்குவித்தவை. அவற்றை நீக்கிவிட்டு, காலத்தை வென்று நிற்கும் மற்ற ராமையா படைப்புகளை
23