பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————சி.சு. செல்லப்பா


மூன்றாவதாக உணர்ச்சி. தங்கள் லட்சியம் ஈடேற இயலாத நிலையில் உணர்ச்சி வசப்பட்டு தங்களை அசட்டு அபிமான உணர்ச்சியால் அழித்துக் கொள்ளாமல் அறிவைக் கொண்டு உணர்ச்சியை சமனப்படுத்தி சுத்தப்படுத்தி தங்கள் வாழ்க்கையை வேறு பயனுள்ள காரியங்களுக்கு பயன்படுத்துகிறார்கள் இருவரும். அதே சமயம், நித்திய இளமையோடு தங்கள் உறவு நீடிப்பதான நம்பிக்கையால் தான் மனிதன் வாழ்கிறான் என்கிறதானால் காதலிலும் அதில் தோல்வி கண்டாலும் அது சாத்தியம் என்பது,இந்த கதையில் தெரிவது.

எனவே நூர் உன்னிலா அன்று சிறுகதையில் ஒருபுதுக் கதவை திறந்ததும், இதைப் பற்றி எல்லோரும் பேசிக் கொண்டோம். அவருடைய ‘விடியுமா கதை வெளிவரும் வரை இந்தக்கதை எனக்கு அபிமானக்கதை . நடுவில் காதலே சாதல், வீரம்மாளின் காளை போன்ற அவர் கதைகளை படித்து ரசித்த போதும். இன்றும் அது அப்பழுக்கு இல்லாத கதையாகவே நான் கருதுகிறேன். எழுதி உள்ள விதம் ரொம்ப சிறப்பானது. ஆரம்பமே நல்ல பிகு முடியும்போதும் அதே தொனியில், இடையில் நெகிழ்ச்சி தளர்ச்சி கிடையாது. ஏற்றப்பட்ட நாணின் விடைப்பு. கதாபாத்திரமே சொல்கிற பாணி. சிறுகடிதத்துடன் ஆரம்பம் சிறுகடிதத்துடன் முடிப்பு. சிக்கனமாக சொல் உபயோகம். அழுத்தமான உணர்த்தல் உதாரணம்;

என் மனதில் தோன்றித் தோன்றி என்னை மயக்கிய பெண்ணுரு யாருடையது என்று தவித்தேனே- அப்பா, அது நூருன்னிஸாவினுடையதே. ஒரு சிறுமியின் முக்காடிட்ட குற்றமற்ற முகம், அதில் மைதீட்டிய இமைகளிடையே குரு குரு என்று சஞ்சலித்த இரண்டு குறை கூறும் விழிகள், ரோஜாக்களிடையே மல்லிகை போல கீழிதழைச் சற்றே கடித்து வெளியே தோன்றின பல்வரிசை - இத்தகைய உருவம் மோகினி போல் என் மனதில் குடிகொண்டு ஆட்டிவைத்ததே-அது அவளுடையது. அவளுடைய மனநிலையும் என்னுடைய மனநிலையை ஒத்திருக்கக்கூடுமா என்ன இல்லா விட்டால் இக்கடிதத்துக்கு ஏன் காரணமாகிறாள் கூட்டத்தில் திரியும் என்னைக் குறித்தல்லவோ கூப்பிடுவது போலிருக்கிறது!

294