பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2



சிறுகதை மணிக்கொடியில் ‘ஸரஸாவின் பொம்மை' என்ற கதையோடு பேசபட்ட இன்னொரு கதை 'வேதாளம் சொன்னகதை' என்று சங்கு சுப்ரஹ்மண்யன் எழுதிய கதையாகும். ‘எழுத்து' சங்கு சுப்ரமண்யன் நினைவு ஏட்டில் (ஏப்ரல் 1969) அதை கதை வெளியிடப்பட்டிருக்கிறது. பாரதி.வ.வெ.சு. அய்யர் இருவரின் நேரடி தரிசனமும் ஆதர்சமும் பெற்ற அவர், அதுக்கு முன்பே சுதந்திரச் சங்கு, சுவராஜ்யா பத்திரிக்கைகளில் கதைகள் எழுதி இருக்கிறார். சென்ற ஏட்டில் வெளியான 'ரோஜாவின் அவதாரம்' கதை 1933ல் 'சுவராஜ்யா' என்ற பத்திரிகையில் வெளி ஆகி இருக்கிறது.

இந்த 'ரோஜாவின் அவதாரம்' கதையும் 'வேதாளம் சொன்ன கதை'யும் நாம் இதுவரை பார்த்த கதைகளிலிருந்து மாறுபட்டு இருப்பதை உணரலாம். 'ரோஜாவின் அவதாரம்' கதையை வ.வெ.சு. அய்யரின் 'எதிரொலியாள்' கதை ரீதியை தழுவி எழுதி இருப்பதாக அவரே எழுதி இருக்கிறார். ரோஜாவின் அவதாரம்' கச்சிதமான கதை. அழகிய, மணமுள்ள, மென்மையுள்ள, வண்ண புஷ்பமான ரோஜாவின் காம்புகளில் முட்கள் இருக்கும் ஒரு இயற்கைப் போக்கில் ஒரு முரண்பாட்டை உணர்ந்த நினைப்பில்எழுந்த கற்பனைக் கதை. அந்த முரண்பாட்டுக்கு பொருள் காண, நியாயம் காட்ட மனித வாழ்விலிருந்தே சுபாவத்திலிருந்தே நடத்தையிலிருந்தே ஒரு தன்மையை எடுத்துக் கொண்டு, ஒரு போராட்டத்தை கற்பனையில் எழுப்பி ஒரு மதிப்பு ஏற்றி இருக்கிறார். அழகு ரசிக்க வேண்டிய அம்சம். ஆனால் அழகை ரசிக்கும் சாக்கில் குலைப்பதில் தான் மனிதன் ஈடுபடுகிறான். உடல் அழகை எதுக்காக தான் விரும்பிப் பெற்றாளோ ரோஷாந்தா அதுக்கு மாறாக, அதை பயன்படுத்தும் முயற்சி-அவள் எதிர்பார்க்காமல்-செய்யப்படவும் அவள் அதிர்ந்து போகிறாள். புதுமைப்பித்தனின் சில்பியின் நரகம் கதையில் கூத்தனுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி ஏற்படுகிறது ரோஷாந்தாவுக்கு. கூத்தனுக்காவது அவன் படைத்த பொருளுக்கு வந்த ஆபத்து லட்சிய நாசம். ரோஷாந்தாவுக்கோ அவளுக்கே வரும் அழிவு. ஆத்ம நாசம்.

இந்த வாழ்க்கைப் பார்வையை அற்புதமானகற்பனையில் ஒரு நல்ல கதையாக ஆக்கி இருப்பது சங்கு சுப்ரமண்யன் திறமை. இது

296