பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————வல்லிக்கண்ணன்

ஒரு ரூபகாலங்காரமான, உவமை வழியான உருவகக்கதை என்று சொல்லலாம். இந்த கதை புனைவியல் போக்கான அதிசயோக்தியான அமானுஷ்யமான பகைப்புலம், களம் கொண்டிருந்தாலும் கதை உள்ளடக்கத்தின் சுபாவம் இயற்கையானதும் யதார்த்தமானதாகவும் இருக்கிறது. மனிதவாழ்வின், மனப்போக்கின் பரப்புக்கு உட்பட்ட இயல்புக்கு ஒத்த சித்தரிப்பாக இருக்கிறது. இதே போல "வேதாளம் சொன்ன கதை"யும் கிழவன் சிறுமியை மணந்து கொள்ளும் சமூக அநீதியை விஷயமாக வைத்து எழுதி இருக்கும் கதை. சமூக சீர்திருத்தவாதிகளின் மனதில், அன்று உறுத்திக்கொண்டிருந்த அந்த பிரச்னையை வைத்து எழுதப்பட்ட முதல் சிறுகதை இதுதான் என்று நான் நினைக்கிறேன். சமூகத்தின் பல குறைகளை வைத்து கதைகள் எழுதியுள்ள மாதவையாவின் ரசிகர் குட்டிக் கதைகளில் இது பற்றிய கதை இல்லை. வ.வெ.சு. அய்யரும் தொடவில்லை.

இந்த கதையில் சங்கு உத்தி புதிதாக கையாண்டிருக்கிறார். மனிதரை கதாபாத்திரங்களாக கொள்ளாமல் மரங்களை தேர்ந்தெடுத்திருக்கிறார். குழந்தை இல்லாதவர்கள் அரச மரத்துக்கு வேப்பமரத்தை கல்யாணம் செய்து வைத்தால் குழந்தைபிறக்கும் என்பது ஒருநம்பிக்கை. இதைவைத்துக் கொண்டு ஒரு நெடுநாளான பழய அரசமரத்துக்கும் இளம் வேப்பங்கன்றுக்கும் முடிந்துபோட்டு இரண்டுக்கும் மனித உள்ளங்களை கொடுத்து, கிழ அரசு பக்கத்தில் சிறுமி வேம்பு நிற்க உறவு ஏற்படுத்தி வேம்புவின் சோக வாழ்வு எடுத்துக் காட்டப்பட்டிருக்கிறது கதையில். ‘குளத்தங்கரை அரசமரம் உயிர்கொண்டு பேசியது போலே இந்த இரு மரங்களும் மனித உணர்ச்சிகளை வெளிக் காட்டுகின்றன. கிழ அரசு சீக்கிரமே இறக்க (புயலால் விழுந்துவிட) இளம்வேம்பு வளர்ந்து விதவையாகதன் மீதி நாட்களை கழிக்கிறாள்.’

இந்த கதையில் கிழவன்-குமரிஉறவு அநீதி மட்டுமின்றி பால்ய விதவைக் கொடுமையும் சேர்ந்து எடுத்துக் காட்டப்பட்டிருக்கிறது.

கதையை சொல்ல கதாசிரியர் கையாண்டுள்ள உத்தியும் புது விதமானது. குளத்தங்கரை ஓரமாக இருந்த ஒருதனி வேப்பமரத்தை பார்த்ததில் வளர்ந்த கற்பனையில் குளத்தங்கரை அரசமரம் சொல்வது போல் எழுதலாம். கனவில் வேப்பமரம் சொல்வது போல சொல்லலாம். ஆனால் இங்கே அதிசயோக்தி, அமானுஷ்ய காலத்து

297