பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————எழுத்து - சி.சு. செல்லப்பா

பின்னணியை எடுத்துக் கொள்கிறார். வேப்பமரமும் அரசமரமும் பேசும் போது, பிள்ளையார் தோன்றி மார்க்கம் காட்டும்போது வேதாளம் இருந்த காலத்துக்கு போவதோ அல்லது விக்ரமாதித்த கால வேதாளத்தை இன்று கொண்டு வருவதோ பொருத்தம்தானே. அந்த வேதாளம் பல நூற்றாண்டுகள் கழித்து விக்ரமாதித்தனையும் உஜ்ஜயினியையம் பார்க்க வந்து, முடியாமல் தமிழ்நாட்டில் ஒரு ஊர் முருங்கமரத்தில் குடி இருக்கையில் வேதாளத்தின் பாஷை தெரிந்த ஒரு சாமியார் வர அவரிடம் சொன்ன கதைகளில் ஒன்றாக வாய்வழி வந்த கதையாக அறிமுகப் படுத்தப்படுகிறது.

வேதாளம் சொன்ன கதை இன்னும் இரண்டு சங்கு சுப்ரமண்யன் மணிக்கொடியில் எழுதினார். இந்த 'வேதாளம் சொன்ன கதை’ உத்தியும் அதன் கருவும் அன்று புதுவிதமானதுதான். சங்கு சுப்ரமண்யத்தின் இந்த இரண்டு கதைகளையும் நான்படித்ததில் எனக்கு பட்டது, சிறுகதை உருவம் கையாளத்தெரிந்த ஒரு கலைஞன் என்பதுடன் 'உயர்ந்த நோக்கத் தோடு எழுதுகிறோமா என்று பேனாக்காரர்கள் கொஞ்சம் கவனிக்க வேண்டும்' என்று அவரே சொல்லி இருப்பது போல் அந்த நோக்கத்துடன் எழுதி இருப்பவர் என்பதும் தான்.

இவரது தமிழ் நடை வ.வெ.சு. அய்யர் வழிப்பட்டதாகும். அதாவது சம்ஸ்கிருத சொற்கள் பயன்படுத்தப்பட்டகம்பீரமான நடை. அரசியல் எழுத்துக்கு அவர் உபயோகித்த நடையில் உள்ள வேகத்துக்கும் அழுத்தத்துக்கும் மாறாக கதைகளில் வர்ணனைக்கு உபயோகித்தது நளினமான நடை. அவருடைய நடைக்கும் வர்ணனைக்கும் இரண்டொரு உதாரணங்கள்.

'அந்த நிலவின் அவாங்கமயமான ஒளியில் பிரகிருதி தேவியின் இன்ப வெள்ளத்தில் ஸீரிதியானாதேவியின் எதிரே ரோஷந்தா நின்றிருந்தாள்'.

‘உயிரை உடலிலிருந்து பிரிப்பது பழத்தைத் தோலினின்று விலக்குவது போன்ற சாதாரணச் செய் கையென அவன் நினைத்திருந்தான். செய்கைகளும் எண்ணங்களுக்கும் தகுந்தவாறே மனிதனின்உருவம் மாறுவது வழக்கம் என்பார்கள். அதனால் அந்தக் கொலையாளியின் கட்டமைந்த தேகம் நாளுக்குநாள்மாறுதலடைந்து உலக்த்திலுலாவும் பூதம் போன்ற உருவத்தை அடைந்து விட்டது. (ரோஜாவின் அவதாரம்)

298