பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————வல்லிக்கண்ணன்



வேம்பு நல்ல அழகி, அந்த ஜாதியிலேயே அவ்வளவு அழகாக யாரும் இருந்ததில்லை. இன்னும் அவள் பூப்பூக்கவில்லை. தங்கம் தங்கமான இலைகளையும் செக்கச்செவேலென்ற கொழுந்துகளையும் அணிந்திருந்தாள். அவள் சூரியன் ஒளியிலும் சந்திரன் நிலவிலும் களித்தாடும் போது வெகு அழகாகயிருக்கும் வாய்க்காலருகே வேம்பு வளர்ந்திருந்தாள்.

'அன்றைக்கிருந்து வேம்புவின் அழகு தேயத் தொடங்கியது. கிழவனை அவள் ஏறெடுத்துப் பார்ப்பதில்லை. அவன் என் என்ன பேசினாலும் கேட்பதில்லை. பசேலென்றும் செவேலென்றும் இருந்த அவள் பட்டாடைகள் கருகக் தொடங்கின. தன்னை அழகு செய்து கொள்ள விரும்பவில்லை. ஆனால் இயற்கை சும்மா இருக்குமா? ஒரு மாதத்தில் அவள் உடம்பில் சின்னச் சின்ன புஷ்பங்கள் அரும்பின. அழகாயிருக்க, முறுவல் காட்டுவது போலிருக்க வேம்பு விரும்பவில்லை. புஷ்பங்களை, எல்லாம் உலுக்கி உதிர்த்து விட்டாள்.’

ஆக, சங்குவின் வேதாளம் சொன்னகதை -1 இன்று படிக்கிற போதும் உணர்ச்சிகளை தூய்மைப்படுத்தி உளப்பாங்கை சரியாக வெளிக்காட்டும் தன்மை அடங்கியதாக முன்போலவே படித்து ரசிக்கத்தக்கதாக இருக்கிறது.

3

இந்த கதையை படித்து விட்டு ‘மணிக் கொடியில்' நகர்கிறபோது அடுத்து நான் சந்திக்கும் குறிப்பாக சிறுகதாசிரியர் ந.சிதம்பரசுப்பிரமண்யன். நாம் இதுவரை பார்த்த மணிக்கொடியில் சிறுகதைகள் எழுதிய பி.எஸ். ராமையா, ந. பிச்சமூர்த்தி, சி.சு. செல்லப்பா, கு.ப.ராஜ கோபாலன், புதுமைப்பித்தன், பெ.கோ. சுந்தரராஜன் ஆகியோருக்கும் சிதம்பர சுப்ரமண்யனுக்கும் ஒரு முக்யமான வித்யாசம் உண்டு. மற்றவர்கள் எல்லோரும் வேறு வேறு பத்திரிகைகளில் கதைகள் எழுதி விட்டு சிறுகதை மணிக்கொடிக்கு வந்தவர்கள். சிதம்பர சுப்ரமண்யன் சிறுகதை மணிக்கொடியிலேயே பூத்தவர். சுத்த மணிக்கொடிக்காரர் என்று அவரைத்தான் சொல்லவேண்டும். சிறுகதைமணிக்கொடி ஐந்தாவது ஏட்டில் (26 மே 1935) ‘வாழ்க்கை முடிவு' என்ற அவரது முதல் கதை வெளிவந்தது.

299