——————————————————————————————எழுத்து - சி.சு. செல்லப்பா
செல்லப்பாவே தேர்வு செய்துதொகுக்க வேண்டும் என்பது என் வாதம்.
திடீரென்று செல்லப்பா சுவரைப்பார்க்கத் திரும்பி உட்கார்ந்து கொண்டுவிட்டார். அறையில் ஏற்கனவே இரண்டு பேர் இருந்தோம். இப்போது மூன்று பேர் ஆகிவிட்டோம். நான், அவர், சுவர் !
‘ஏன் சுவரைப் பார்த்து உட்கார்ந்து விட்டீர்கள்?'
‘ஏ சுவரே! வந்திருக்கும் இந்த ஆளுடன் பேசுவதை விட, எனக்கு உன்னுடன் பேசுவது திருப்தியாக இருக்கிறது.
'ஆமாம். ஏனென்றால் சுவருக்கு அபிப்பிராயங்கள் கிடையதால்லவா!’
‘ராமையாவை விமர்சிக்கும் நபருடன் எனக்கு பேச்சு வார்த்தை கிடையாது.”
‘நாம் ஓர் ஒப்பந்தம் செய்து கொள்வோம். பி.எஸ். ராமையாவை விட்டு விட்டு மற்றவற்றைப்பற்றி மட்டும் இனிமேல் பேசுவோம்.'
சரி என்று சொல்லிவிட்டு மறுபடி என்பக்கமாகக் திரும்பி உட்கார்ந்து கொண்டார். என் உதட்டோரத்தில் சிரிப்பு ஒளிந்து கொண்டிருந்ததை அவர் கவனித்திருக்க வேண்டும். 'என்னடா பண்ணுவேன். உன்னோட பேசாம என்னால் இருக்கமுடியாதேடா' என்றார்.
என் மனம் நெகிழ்ந்தது.'
('பாரதமணி' செப்டம்பர் 2001)
செல்லப்பாவின் பிடிவாதகுணம் பிரசித்தமானது. அது அவரது பலமாகவும் பலவீனமாகவும் அமைந்திருந்தது. அவருடைய தாயார் வழி ஊரான வத்தலக்குண்டு மீது அவருக்குத் தனி அபிமானம் இருந்தது. அந்த ஊருக்குப் பெருமை தேடித்தந்த பி.எஸ். ராஜமய்யர், பி.எஸ். ராமையா இருவரையும் அவர் போற்றி மகிழ்ந்தார்.
வத்தலக்குண்டுக்காரர்கள் இவ்விருவரின் பெருமைகளை உணரவில்லையே என்ற வருத்தமும் செல்லப்பாவுக்கு இருந்தது. ராஜம் அய்யரின் பெருமையை அவர்களுக்கு உணர்த்துவதற்காகவே
24