பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————வல்லிக்கண்ணன்



குஞ்சிதம் முப்பதுக்கள் காலத்தவள். இன்று அறுபதுக்கள் தாண்டி எழுபதுக்களுக்குள் நுழைந்து விட்ட கால கட்டத்தில் குஞ்சிதத்தை பார்த்து இன்றைய மினி ஸ்கிரிட் 'மாடர்ன்' பெண் சிரிக்கக்கூடும். ஆனால் அவளுக்கு முன்பும் ஒரு குளம் இருப்பது அவளுக்கும் புரியப் போவது எதிர்பார்க்க வேண்டியதே, என்று குஞ்சிதம் தன் அனுபவத்தில் பதிலுக்கு சிரிக்கக் கூடும். இந்த வித பார்வை சம்பந்தமாக முற்போக்கு பிற்போக்கு என்ற மதிப்பு சம்பந்தமாக பேசுவது அர்த்தமற்றது. இந்த கதையில் அடிப்படையான மதிப்பு தொடப்பட்டிருக்கிறது. நட்சத்திரங்களை ஆட்டி வைக்கும் ஆசையுடன் நான் பாட ஆரம்பிக்கிறேன். ஆனால் அது குரங்கை ஆட்டி வைக்கும் கேலிக் கூத்தாக ஆகிறது என்று ஒரு கவி பாடிய மாதிரி ஆயிற்று என் வாழ்வும் என்ற கதையில் குஞ்சிதம் சொல்வது போல வாழ்க்கையும் தாம்பத்திய உறவும் கேலிக் கூத்தாக ஆகாமல் சந்தான நிரந்தர நேர்மையான உறவில் இருக்க வேண்டியது வலியுறுத்தப் பட்டிருக்கிறது. கதை முடிவு சம்பாஷணை இந்த உறவை எவ்வளவு நளினமாக ஏற்படுத்துகிறது!.

‘நான் இனிமேல் உன் டாக்டர் இல்லை. உன் ட்ரைவர். வண்டியை ஒட்ட ஆரம்பிக்கலாமா?'

'என்னை என்ன கேள்வி? நான் உங்கள் சமையல்காரி.'

‘சமையல்காரியா? என் உயிரையும் உணர்வையும் உலகத்தையு மன்றோ சமைக்கப்போகிறாய்!'

ஆண் பெண் உறவிலே வேண்டிய நிதானம், பரஸ்பர விட்டுக்கொடுத்தல் இதில் எவ்வளவு சூசனையாக உணர்த்தப்பட்டிருக்கின்றது. இந்த கதையின் உருவம் இது வரை பார்த்த கதைகளை விட அச்சாவானது. ஒரு லட்சிய சிறு கதை என்பேன். கதையில் முதல்வரி, 'மிஸ் குஞ்சிதம் மிஸஸ் பாஸ்கரன் ஆகவில்லை'. கதையின் கடைசி வரி மிஸ் குஞ்சிதம் மிஸஸ் பாஸ்கரன் ஆகிவிட்டாள். இந்த இரண்டும் 'டிரமாடிக்' தன்மை கொண்ட வரிகளாக இருப்பதுடன் கதையின் கட்டுக்கோப்பு அங்கக்கட்டாக அமைய பயன்பட்டவை. அதோடு எதிரிடை விரோதமான இரு கடை நிலைகளுக்கு இடையே ஒரு காரணகாரிய வளர்ச்சி முற்பட்டிருப்பதை உணர்த்தி எதிர்மறையிலிருந்து உடன் பாடான மாற்றம் காட்டவும் பயனாகி இருக்கிறது. கதை இந்த வரிகளுக்கு இடையே வளர்ந்து உச்ச கட்டத்தில் போய் நிற்பதைமுடிவை நாம்

303