பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



நூர் உன்னிஸா

கு.ப. ராஜகோபாலன்


நான் வேலூர் சிறையிலிருந்து விடுதலையடைந்து ஒரு வாரம் இருக்கும். ஒருநாள் காலையில் நாற்காலியில் சாய்ந்து கொண்டு என் உயிர்வெள்ளம் இனிமேல் எந்த நிலத்தில் பாயப்போகிறதோ என்று யோசனை செய்து பார்த்துக் கொண்டிருந்தேன். நான் கொண்டு செய்யக்கூடிய காரியமாக எனக்கு ஒன்றும் தென்படவில்லை. தேசீய இயக்கத்திலோ ஒரு தேக்கம். காங்கிரஸ் நிர்மாணத் திட்டம் அப்பொழுது சிதைவுற்றுக் கிடந்தது.

தபால்காரன் ஒரு கற்றை தமிழ்ப்பத்திரிகைகளுடன் ஒரு கவரையும் கொண்டு வந்து கொடுத்தான். ஏகாங்கியான எனக்கு இவ்வுலகில் யார் கடிதம் எழுதக் கூடுமென்று எண்ணிக்கொண்டே அதை உடைத்துப் படித்தேன். பின்வருமாறு ஆங்கிலத்தில் அது எழுதப்பட்டிருந்தது.

குலாம் காதர் எம்.ஏ.
ப்ரோ டிப்படி கலெக்டர்.

மதராஸ்
19–7–30


என்னருமைத் தோழர்,

நீ என்னை மறந்திருப்பாய் என்று நான் நினைக்கவில்லை. இத்தனை வருஷங்களாகக் கடிதம் எழுதாதற்குக் காரணம்; எனக்கு நீ இருக்குமிடம் தெரியாததுதான். இப்பொழுதும் இந்தக்கடிதத்திற்கும் மேலேற்படும் நமது சந்திப்பிற்கும் காரணம் என் தங்கை நூருன்னிஸா, நாம் படித்தபோது நம்முடன் விளையாடினவள், ஞாபகமிருக்கிறதா? தற்செயலாகச் சென்ற பத்தாம் தேதி தினசரிப் பத்திரிக்கையில் உன் பெயரைக் கண்டு அதை எனக்குக் காட்டினாள். அவள் உன் இனிஷியல்களைக்கூட நினைவில் வைத்திருந்ததால் நீ என்று நிச்சயிக்கமுடிந்தது. நீ அன்று தான் வேலூர்ச் சிறையிலிருந்து விடுபட்டதாகப் பத்திரிகையில் கண்டிருந்தது. உடனே அவளுடைய

306