பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஜீவ ரகசியம்

டி.ஆர். நடராஜன்

வீசும் மென் காற்று
துளசி சேர்க்கும்
மண் தரை மீதில்,
அதே காற்றே தான்
வீசி அடித்து
தூசி பெருக்கும்
அத்தரை மீதில்.
ஆக்குவதேன்.
அழிப்பதேன்?



நான் மெய்மறந்து உன்னையே நினைக்கிறேன். ஆனால் நாம் இருவரும் இவ்வுடலில் சதிபதிகளல்ல. எப்போதும் சரீர இச்சை வேண்டாம் நமக்கு. பூர்ணமாக நினைவு ஆகாசத்தில் ஜொலிக்கும் சுக சந்திரனுக்கு களங்கமுண்டாக் காதிருப்போம். சரி தானே?

உன்
நூர்உன்னிஸா

அவ்வொளி மயக்கத்தில் அவளே மதியுருவுடன் வந்து என்னிடம் வாக்கு வாங்குவது போலிருந்தது.

என் மனமோகினியின் கட்டளைப்படி நான் உலக வழிகளில் திரிந்து வருகிறேன். நான் செய்யும் சகல காரியங்களிலும் நான் நினைத்த மாத்திரத்தில் என் முன் தங்கப்பதுமை போல வந்து நின்று என்னை உற்சாகப்படுத்துகிறாள். என்சோர்விலும் என்மனதின்முன் குதித்துக் கொண்டு வந்து நின்று என்னை ஆற்றுகிறாள்.

நன்றி : கனகாம்பரம் கதைத் தொகுப்பிலிருந்து:

அல்லயன்ஸ் பிரசுரம்

314