பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————வல்லிக்கண்ணன்


சிறுகதை அமர்வில் படைப்பு பற்றியும் விமர்சனம் பற்றியும் பலதரப்பட்ட எழுத்தாளர்களின் கருத்துக்கள் கிடைத்த பெரிய லாபம் இருந்தாலும், 'கணக்கெடுப்பு' வேலை சரிவர நடக்கவில்லை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். இந்தக் குறை நாவல் கவிதை, விமர்சனம் பற்றிய அமர்வுகளில் நிவர்த்திக்கப்பட்டதாகச் சொல்லாம். முதலில் தடுக்கி விழுந்தது பின்னால் சுதாரித்துக் கொள்ள வழி விட்டாற் போல.

நாவல் அமர்வுக்குத் தலைமை வகித்த ராமையாவின் முன்னுரையிலும் பின்னுரையிலும் நிறைய விஷயங்கள் வெளிவந்தன. சிந்திக்கத் தெரிந்தவன், சமூகத்திலும் சத்யத்தை உணர்த்த வந்தவன் தவறும் போது கோபம் ஏற்படுகிறது நியாயம் என்றார் அவர். சமத்துவத்துக்கும் அப்பால் மானுடத்தைத் தொட்டு எழுதப்பட வேண்டும் என்று கூறி, இலக்கியத்தில் அரசியல் வெறித்தனம் கூடாது என்றும் கண்டித்தார். மதிப்புபற்றி விளக்குகையில், ரயில் இன்ஜினுக்குக் கரிதான் தேவை. வைரம் பயன்படாது என்றது நயமாக இருந்தது.

நீண்ட துவக்க உரை ஆற்றிய பி.வி.சுப்ரமண்யன் இந்தியப் பண்பாட்டுக்குள்ள அடிப்படி மதிப்புகள் பற்றி பிரஸ்தாபித்து, இன்றைய பெரும்பாலான நாவல்களில் ஆரம்பம் நன்றாக இருந்தாலும் முடிவில் தொய்வு இருப்பதாகக் குறைப்பட்டார். காந்தீயநாவல்கள் எழுத வயதும், ஈடுபாடும் தேவை என்பது அகிலனின்கருத்து. காந்திய நாவல்களுக்கு தனி முக்யத்வம் தேவையா என்பது ஆர்வியின் வினா. மனிதனை மனிதனாக வாழச் செய்யும் அளவுக்கு உள்ளத்தைத் தொடும் நாவல் எதுவும் வெளிவரவில்லை என்பது அவரது கணிப்பு. கலைப் படைப்பு என்கிற முறையில் பார்வை செலுத்த வேண்டுவதை, வற்புறுத்திய டாக்டர் கணேசன் இன்றைய நாவல்களில் சிக்கல்கள் அதிகம் என்றார். லஞ்ச ஊழல் போன்ற அரசியல் பிரச்சனைகள் எழுத வேண்டும் என்று நா. பார்த்தசாரதி வலியுறுத்தி, எழுத்தாளர்கள் தங்கள் சொந்தக் கவலைகளை மட்டும் திருப்பித் திரும்பி மேடைகளில் அவிழ்த்து விடுவதைக் கண்டித்தார். சோதனை என்ற முன்கூட்டிய நினைப்போடு எழுதக்கூடாது என்பது எம்.ஏஸ்.கல்யாணசுந்தரத்தின் வாதம். வரலாற்று நாவல்களில் வரலாற்றுப் பிழைகள் புகுவதை

319