பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
9

மதுரை மாவட்டம் வத்தலக்குண்டு கிராமத்தில், 1912 செப்டம்பர் 29ஆம் நாள் பிறந்தார் செல்லப்பா.

அவரது தந்தை பெயர் சுப்பிரமணிய அய்யர். ஊர்சின்னமனூர். ஆகவே 'சி.சு.' என்பதைத் தனது பெயரின் முதல் எழுத்துகளாகக் கொண்டார்.

வெகுகாலம் வரை அவர் சி.எஸ். செல்லப்பா என்றே பெயரை எழுதி வந்தார். 'பாரததேவி' மாத இதழில், கு.ப. ராஜகோபாலுடன் அவர் பணியாற்றியபோது, பத்திரிகை ஆசிரியர் வ.ரா. பெயரை தமிழில் எழுதவேண்டும் என்று குறிப்பிடவும், சி.சு. செல்லப்பா என்று எழுதலானார்.

மதுரை கல்லூரியில் செல்லப்பா பி.ஏ. படித்தார். அப்போதே, மகாத்மா காந்தியின் வழிகாட்டலினால் ஈர்க்கப்பட்டு, சுதந்திரப்போராட்டத்தில் கலந்து கொண்டார். சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுசிறை சென்றார். விடுதலை பெற்று வெளியே வந்தபிறகு, காந்திய வாழ்க்கை முறைகளைக்கடைப்பிடித்து எளிய வாழ்க்கையை மேற்கொண்டார். கைராட்டையில் நூல்நூற்றல், கையால் செய்யும் காகிதம் தயாரித்தல், போன்றவற்றில் அவர்உற்சாகம் கொண்டு ஊக்கத்துடன் செயல்பட்டார். அப்போதே எழுத்து முயற்சியிலும் முனைத்திருந்தார்.

1930களில் புகழ் பெற்று விளங்கிய “சுதந்திரச்சங்கு” வாரப்பத்திரிகையில் சி.சு.செல்லப்பாவின் முதல் கதை வெளிவந்தது. 1934ம் ஆண்டில். அது முதல் அவர் ஆர்வத்தோடு சிறுகதைகள் எழுதலானார். ‘மணிக்கொடி' இதழில் அவருடைய கதைகள் தொடர்ந்து இடம் பெற்றன. கலைமகள், பாரததேவி, தினமணி, சத்திரோதயம் முதலிய பத்திரிகைகளில், தனித்தன்மை உடைய சிறுகதைகளை அவர் எழுதினார். அதன்மூலம் இலக்கிய ரசிகர்களின் கவனிப்பையும் பாராட்டுதல்களையும் பெற்றார்.

‘மணிக்கொடி நடந்துகொண்டிருந்த காலத்தில் (1930 களில்) சி.சு. செல்லப்பா சென்னைக்கு வந்து பத்திரிகைத் துறையில் பணிபுரியலானார். ‘மணிக்கொடி'க்குப்பிறகு, ‘பாரததேவி மாத

27