இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
ஆசிரியர்- சி.சு. செல்லப்பா
புதுமை இலக்கிய மாத ஏடு
அடக்கம் எழுத்து வளர - தலையங்கம் சாகித்ய அகாடமி தமிழ் பரிசு - க.நா.சு பெட்டிக்கடை நாரணன் - ந. பிச்சமூர்த்தி கவிதை - மயன் நல்ல தமிழ்ச் சிறுகதைகள் - க.நா. சுப்ரமண்யம் எழுதுவதெல்லாம்... - சிட்டி தாழை பூத்தது - பெ.கோ. சுந்தரராஜன் பாரதிக்குப்பின் - 1 - க.நா.சு. கமலாம்பாள் சரித்திரம் - சி.சு. செல்லப்பா விண்ணும் மண்ணும் - ந. சிதம்பரசுப்ரமண்யன் தற்கால தமிழ் இலக்கிய விமர்சன தோரணை - சி.சு. செல்லப்பா கெளமாரி - சாலிவாஹனன் எம்.வி.வி. கதைகள் - தி. ஜானகிராமன்
முழுக்க முழுக்க கருத்து ஆழமும் கனமும் உள்ள ஒரு இலக்கியப் பத்திரிகையை, இந்த பாமரப் பிரியமான பத்திரிக்கையைப் பரப்புக் காலத்தில் ஆரம்பிப்பது ஒரு சோதிக்கிற முயற்சிதான். எழுத்து பற்றி பிரஸ்தாபித்தபோது பல வாசகர்கள், எழுத்தாளர்கள், நண்பர்கள் இத்தகைய அபிப்ராயத்தைத் தான் எதிரொலித்துச் சொன்னார்கள். ஆனால், இத்தகைய ஒரு முயற்சி தற்போது தேவை என்பதை மட்டும் எல்லோரும் ஒப்புக் கொண்டார்கள். தன் ரகவரிசையில் எழுத்து முதலாவதாக வருகிறது என்று நாம் அடித்துச் சொல்ல வரவில்லை. கால் நூற்றாண்டுக்கு முன்பு வ.ரா. ‘மணிக்கொடி' இத்தகைய சோதனை முயற்சியாக அமைந்ததற்கு முன்பு, பால பாரதி, பஞ்சாமிர்தம், பிரஜா நுகூலன் போன்றவைகளும் பின்பு சுதந்திரச் சங்கு, சூறாவளி, தேனி போன்றவைகளும் அதன் உடன் நிகழ்காலத்திலேயே கலைமகள்