பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————வல்லிக்கண்ணன்

இந்த வருஷப் பரிசுப் பட்டியலைப் பார்க்கும் போது மற்றமொழிகளில் இலக்கிய முயற்சிகளுக்குப் பரிசு அளித்திருக்கிறார்கள் என்றும், தமிழுக்கு மட்டுமே இது நேர்ந்திருக்கிறது என்பதும் தெரிகிறது. அந்த நூல்களின் தராதரங்கள நமக்குத் தெரியாது. ஆனால் சிறுகதை, நாவல், நாடகம, முதலிய நூல்களுக்குப் பரிசளித்திருக்கிறார்கள். தமிழ் நூல் மட்டுமே ராமாயணத்தைத் திருப்பிச் சொல்லுகிற நூலாக இலக்கிய சிருஷ்டி என்று சொல்லமுடியாத வகையிலே அமைந்திருக்கிறது. இப்படிப் பரிசளித்திருப்பது இலக்கிய வளர்ச்சிக்கு உதவியது ஆகாது.

இந்தப் பரிசுகள் எப்படி அளிக்கப்படுகின்றன என்பது மர்மமாகவே இருக்கிறது. இரண்டு வருஷங்கள் தமிழுக்குப் பரிசு

எழுத்து


மாதந்தோறும் வருவது


தனிப்பிரதி ந.பை. 50


ஆண்டு சந்தா ரூ. 6.00


3 ஆண்டுகளுக்கு ரூ. 10.00 (சிலோனுக்கும்)


பர்மா மலேயா முதலிய வெளிநாடுகளுக்கு


(ரூ. 7.50, ரூ. 15.00)


இலங்கை அன்பர்கள் மட்டும் வி.பி.பி. மூலம் சந்தா தொகையை


செலுத்தலாம். மற்றவர்கள் மணியார்டர் மூலம் அனுப்ப வேண்டும்.


சகலவித தகவல்களுக்கும் எழுத முகவரி :


சி.சு. செல்லப்பா, 'எழுத்து’


19-A, பிள்ளையார் கோவில் தெரு,


திருவல்லிக்கேணி, சென்னை - 5.


'எழுத்து' பக்கங்களில் கையெழுத்திட்ட கட்டுரைக் கருத்துக்கள் அதை


எழுதியவருடையவையாகும். எழுத்து கொண்டுள்ள அபிப்ராயம் அல்ல.

தராதிருந்துவிட்டு மூன்றாவது வருஷம் இந்நூலைத் தேர்ந்தெடுத்தது சரியல்ல என்றே சொல்லவேண்டும். தமிழ் இலக்கியத்தில் இன்றைய வளத்துக்கு அடிகோலித் தந்த காலஞ்சென்ற புதுமைப்பித்தன், வையாபுரிப் பிள்ளை இவர்களுக்கோ, அல்லது இன்று இலக்கிய வளர்ச்சியை சிறுகதை, நாடகம், நாவல், விமர்சனம், சரித்திரம் முதலிய துறைகளில் சாத்யமாக்கும் ந. பிச்சமூர்த்தி, சிதம்பர சுப்ரமண்யன், லா.ச.ராமாம்ருதம், ஆர். ஷண்முகசுந்தரம்,



35