உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————எழுத்து - சி.சு. செல்லப்பா



ஏழைக் கென்றிரங்கி,
எளிதான விலையில் விற்க
கருவாடு போன்ற வாழைப்
பழங்களும்,
புகையிலைக் காம்பும்
பீர்க்கன் இலையைப் பழிக்கும்
வெற்றிலையும், வெட்டுப்பாக்கும்,
சின்னப்பயல்களுக்கென்று
பலூனும்,
பெப்பர்மென்டும்,
பெரியவர்களுக்கென்று
நெய்பொடியும்,
லேகாமருந்தும்
வகையாகச் சேர்த்துவைத்தேன்.
நாரணன்பெட்டிக்கடையின்
நாமமே பரவலாச்சு
இன்று கடன் இல்லை என்ற
எச்சரிக்கை எதிரே இருக்கும்.
என் பேச்சு தேனாய்ச்சொட்டும்.
குழைவிலே வாங்குவோர்கள்
வண்டாகி, பின்னர்
வாடிக்கைக்காரர் ஆகி
ஆண்டிரண்டோடும் முன்னே
தத்வங்கள் பொய்க்கக்கண்டேன்.

பல தத்வங்கள் கவிழக்கண்டேன்.
உயிரற்ற ஜடத்தில் பெருக்கம்
உண்டாகா தென்ற கொள்கை
பொய்ப்பதை நானே கண்டேன்.
இருபது ரூபாய் முதலே
இருநூறாக மாறி
ஏற்றம் எனக்களிக்க
உருமாலை வாங்கிக்கொண்டேன்,

38