உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————வல்லிக்கண்ணன்

ஓராளென ஆகிவிட்டேன்.
உருமாலை நாராயணனாய்
உருமாறி உயர்ந்தபின்னர்
அகமடியர் தெருவில் சின்ன
அங்கயற்கண்ணி மளிகைக்
கடையொன்று வைத்துவிட்டேன்.
சம்பளத்தை அள்ளிவீசச்
சுரங்கம் சுரக்கவில்லை.
தோதாகப் பொடிப் பையன்கள்
சம்பளமில்லா துழைக்க,
தொழிலிலே தேர்ச்சி கொள்ள,
முன்வந்து தொங்கவில்லை.
எனவே,

கோழியுடன் எழுந்திருந்து
கோட்டானுடனே துயிலும்
கோலமே வாழ்க்கை ஆச்சு.
சரக்கோ கொஞ்சம்
எட்டுமணி நேரம்
தட்டாது விற்றால்
தட்டில் மிச்சம்
தங்கி இருக்குமா?
இப்படிக்கிருக்க
எலிவேறு இரவில்
இராஜ்யம் வகித்தால்
என் உருமாலை மட்டும்
கிழியாமல் போமா?
போனாலும்
நீண்ட விழியாளின் அருள்
நீங்கவில்லை.
முதலுக்கு மோசம்
மருந்துக்கும் காணோம்.
மண்ணெண்ணை பங்கீடு

39