உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————வல்லிக்கண்ணன்



பணக்காரர் ஆனால்
பாவம் என்றேதேதோ பேப்பரில் வந்தன.
பாவமொன்றில்லாவிட்டால்
பாருண்டா?
பசியுண்டா?
மண்ணில் பிறப்பதற்கு
நெல்ஒப்பும்போது,
களிமண்ணில்கலந்திருக்க
அரிசி மறுப்பதில்லை.
நக்ஷத்திரம் போல,
நல்முத்துப்போல,
சுத்தமாய் அரிசி விற்க,
பங்கீட்டுக் கடை என்ன
சல்லடையா?
முறமா?
நெல்மிஷினா?
பலகைக்காரியா?
மூட்டையைப் பிரிக்குமுன்னர்
முந்நூறு பேரிருந்தால்
சலிப்பதெங்கே?
புடைப்பதெங்கே?
புண்ணியம் செய்யத்தான்
பொழுது எங்கே?

அங்கயற்கண்ணியன்
அருளென்ன சொல்வேன்
பங்கீடு வாழ்க !
பாழ்வயிறும் வாழ்க!

(பங்கீட்டு முறை அமுலில் இருந்த காலத்தில்
எழுதப்பட்ட கவிதை)

41