உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



கவிதை



'மயன்'

எனக்கும் கவிதை பிடிக்காது, மனிதன் எத்தனையோ
எட்டுக்கள் எடுத்து வைத்துவிட்டான். இவற்றில்
எத்தனை எட்டுக்கள் கவிதையால்
சாத்திய மாயின
என்று யார்
தீர்மானித்துச் சொல்ல இயலும்? பின்
எதற்காகத்தான் கவிதை தோன்றுகிறது?
மொழியின் மழலை அழகுதான்.
ஆனால் அது போதவே
போதாது.
போதுமானால் கவிதையைத் தவிர வேறு
இலக்கியம் தோன்றியிராதே. போதாது
என்றுதான், ஒன்றன் பின் ஒன்றாக
இத்தனை இலக்கியத்
துறைகள் தோன்றின - நாடகமும், நாவலும், நீள் கதையும்,
கட்டுரையும் இல்லாவிட்டால்
தோன்றியராது; ஆனால் அவையும் தான்
திருப்தி தருவதில்லையே!
அதனால்
தான் நானும் கவிதை எழுதுகிறேன்.
மனிதனுக்குக் கலை எதுவும் திருப்தி தராது.
மேலே, மேலே என்கிற ஏக்கத்தைத்தான்
தரும். கலையின்
பிறப்பு
இந்த அடிப்படையில் ஏற்படுவது. கடவுளே
இன்னமும் உயிர்வைத்துக்கொண்டிருப்பது
இந்த அடிப்படையில் தான் சாத்தியம்
என்று சொல்லலாம்.

42