பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிறந்த தமிழ்ச் சிறுகதைகள்

- ஒரு தொகுப்புக்கான சில குறிப்புகள் -

க.நா. சுப்ரமண்யம்

சிறுகதை என்கிற நவீன இலக்கியத் துறையில் தற்காலத் தமிழ் இலக்கியாசிரியர்கள் ஒரளவுக்கு முன்னேறியிருக்கிறார்கள்: கணிசமான அளவில் இத் துறையில் ஒரு வளம் காணக்கிடக்கிறது என்று சாதாரணமாக எல்லோருமே ஒப்புக்கொள்ளுகிறோம். ஆனால் இந்த வளத்தைச் சீர் தூக்கிப் பார்ப்பதிலே, எது வளம், எது வளமின்மை என்று பார்ப்பதிலே, நமக்குள்ளே பலதரப்பட்ட அபிப்பிராயங்கள் நிலவுகின்றன. சிறுகதை என்பது முதலில் கதையாகத்தான் இருக்க வேண்டும் என்கிற ஒரு அடிப்படையை வைத்துக்கொண்டு, ராஜாஜி, சாமிநாதய்யர் போன்றவர்களையும், கல்கி, கி.வா. ஜகந்நாதன் போன்றவர்களையும், புதுமைப்பித்தன், கு.ப.ரா. மெளனி போன்ற சிறுகதை ஆசிரியர்களுக்குச் சமமானவர்களாக மதிப்பிட்டுச் சொல்லும் போக்கும் இன்று நமக்கு


சிறுகதை, நாவல், நாடகம், கவிதை, இலக்கிய விமர்சனம் ஆகிய பல இலக்கிய உருவ வகைகளிலும் புதுச் சோதனைகள் செய்து இருபத்தைந்து வருஷ காலமாக தமிழிலும், இங்கிலீஷிலும் எழுதி வரும் க.நா.சு. 1912ல் பிறந்தவர். தஞ்சை ஜில்லா சுவாமிமலை அவரது சொந்த ஊர். “தெய்வ ஜனனம்’, ‘அழகி, ஆடரங்கு, சிறுகதைத் தொகுப்புகளும், பசி, ‘சர்மாவின் உயில் பொயத்தேவு ஒருநாள் ஏழுபேர், சமூகச்சித்திரம், ‘ஆட்கொல்லி, வாழ்ந்தவர் கெட்டால் ஆகிய நாவல்களும், நல்லவர் என்ற நாடகமும் படித்திருக்கிறீர்களா (இரண்டு தொகுதி) முதல் ஐந்து நாவல்கள் என்ற இலக்கிய விமர்சன நூல்களும் வெளிவந்திருக்கின்றன. ‘மால்தேடி’, அசுரகணம்’, ‘பட்டணத்து வாழ்வு’, ஜாதி முத்து ஆகிய நாவல்களும் ஊதாரி என்ற நாடகமும் எழுதியுள்ளார். இலக்கிய விசாரம் விமர்சனக் கலை என்ற புஸ்தகங்கள் வெளிவர இருக்கின்றன. வெளிநாட்டு சிறந்த நாவல்கள் பத்துக்குமேல் மொழி பெயர்த்து இருக்கிறார். மயன், ஆண்டாள், ஆர். சத்யன், கே. பரமசிவம் ஆகிய புனைபெயர்கள் அவருக்கு உண்டு. இப்போது நம்நாட்டு, வெளிநாட்டுப் பத்திரிகைகளுக்கு எழுதி ஒரு சுதந்திர எழுத்தாளராக வாழ்க்கை நடத்தி வருகிறார்.


43