பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————எழுத்து - சி.சு. செல்லப்பா

இருக்கிறது. தமிழில் இதுவரை வெளி வந்துள்ள ஒரே ஒரு ‘தரத் தொகுப்பு நூலான சிறுகதை மஞ்சரியிலே, கதைகளும் சிறுகதைகளும் (சோமு, சங்கர், அகிலன், ஜகந்நாதன், துரன் முதலியவர்களுடையவை வெறும் கதைகள், புதுமைப்பித்தன், கு.ப.ரா. பிச்சமூர்த்தி, ஜானகிராமன் இவர்களுடையவை சிறுகதைகள்) இடம் பெற்றிருக்கின்றன. தொகுப்பாசிரியருக்கு கதைக்கும் சிறுகதைக்கும் உள்ளதாரதம்மியம் தெரியவில்லை என்பது வெளிப்படை.

கதை என்பது எத்தனையோ காலமாக, வழி வழி வந்த ஒரு சொத்து. (ஆனால் அதற்கு இலக்கிய அந்தஸ்து சிறுகதையான பிறகுதான் ஏற்படும்). மஹாபாரதத்துக்கும், ராமாயணத்துக்கும் கதைதான் அடிப்படை. ஷேக்ஸ்பியரின் கவிதை நாடகங்களுக்கும் கதைதான்அடிப்படை. புற நானூறிலுள்ள பல செய்யுள்களுக்கும் கதைகள் தான் அடிப்படை. இது தவிர புத்தர் ஜாதகக்கதைகள், பஞ்சதந்திரக் கதைகள், பரமார்த்த குரு கதைகள், விக்கிரமாதித்தன் கதைகள், இவையெல்லாம் கதைகள். இந்தக் கதைகளில் பலவும் ஆரம்பத்தில் ஆதி காலத்தில் இந்தியாவிலே தோன்றித்தான் உலகெங்கும் பரவின என்றுசொல்லிப் பெருமைப்படுபவர்கள் உண்டு.

கதை என்பது ‘பொய்யை அடிப்படையாகக்கொண்ட ஒரு சித்திரம்-அல்லது பல சித்திரங்கள் என்றுசொல்லலாம். பொய்யே கலக்காத கதைகளும்இருக்கலாம்தான். ஆனால் உலகத்தில் எந்த ஆதி இலக்கியத்திலும் பொய் சிறிதும் கலவாத கதை இருந்ததாகத் தெரியவில்லை. சத்தியத்தை நிலைநிறுத்தத் தோன்றிய அரிச்சந்திரன் கதையும்கூடப் பொய்யை அடிப்படையில் அடக்கிய கதைதான். தொல்காப்பியத்தில் தமிழ்ச் சிறுகதை பற்றிக்கூறுகிற ஆதாரம் இருப்பதாகக்கூறிப் பெருமைப்படுகிற (படுத்துகிற) பண்டிதர்களும் கூட இந்தப் ‘பொய்ச் சித்திரத்தைத்தான் சொல்லுகிறார்கள். அது கதையின் இலக்கணம்; இலக்கிய அந்தஸ்தை எட்டாத எல்லாக் கதைகளுக்கும் லக்ஷணம் அது.

கதை என்பது இலக்கியத்தில் ஒரு தனித்துறையல்ல என்பது வெளிப்படை. அது எல்லாப் பகுதிகளுக்கும் பொதுவான ஒரு