பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————எழுத்து - சி.சு. செல்லப்பா

மணிக்கொடியில் எழுதிய நல்ல சிறு கதாசிரியர்கள் இருவர் இன்று நம்மிடையே இல்லை. ஒருவர் புதுமைப்பித்தன். மற்றவர் கு.ப.ராஜகோபாலன். இவர்கள் இருவருமே இலக்கியத்தில், குறிப்பாகச் சிறுகதைத் துறையில், சோதனைகள் செய்து பார்க்கும் திறனும், செய்த சோதனைகள் சிலவற்றில் இலக்கிய வெற்றியும் பெற்றவர்கள். புதுமைப்பித்தன் செய்த சோதனைகளும் அதிகம்; வெற்றி தோல்விகளும் அதிகம். ஆனால் பெற்ற வெற்றிகள் கணிசமானவை. கு.ப.ரா. செய்த சோதனைகள் குறைவு. அந்த அளவில் வெற்றி அதிகம். எண்ணிக்கையளவில் கணக்கெடுத்தால் கு.ப.ராவின் வெற்றி பெற்ற சிறுகதைகள் புதுமைப்பித்தனுடைய வெற்றிபெற்ற சிறுகதை எண்ணிக்கையைவிட அதிகமானாலும் கூட, புதுமைப்பித்தனுடைய சோதனை, ஆழம் பரப்பு இரண்டும் அதிகம் என்பதனால் அது தமிழில் சிறு கதை வளத்தை அதிகமாக்கியது. பிற்காலச் சோதனையாளருக்குச் சிறப்பான வழிகாட்டியது என்றும் சொல்லவேண்டும்.

இன்னும், நம்மிடையே இருந்தும், அதிகமாக எழுதாமல் மணிக்கொடியில் மட்டும் சிறப்பாக எழுதிய ஆசிரியர்களிலே மெளனி என்பவரைத் தனியாகச் சொல்ல வேண்டும். இவருடைய பதினைந்து பதினாறு சிறுகதைகளிலே, சிறப்பாக ‘அழியாச் சுடர்’, ‘பிரபஞ்சகானம்’ என்கிற சிறு கதைகளில் இதுவரை தமிழில் காணக்கிடைக்காத ஆழம் காணப்படுகிறது. சொல்வதற்கு மிகவும் சிரமமான பல விஷயங்களை, ஒரு லகவியக் காதல் நோக்கிலிருந்து romantic melancholy என்கிற ரீதியில், அழுத்தம் தந்து அற்புதமான சிறுகதைஉருவம் படைத்திருக்கிறார்மெளனி, தமிழில் இன்று வரை வெளிவந்துள்ள சிறுகதைகளிலே மெளனியின் இந்த இரண்டு சிறு கதைகளும் ஒரு சிகரம் என்பது என் அபிப்பிராயம்.

ந. பிச்சமூர்த்தி ஆரம்ப காலத்தில் கவிதை நிரம்பிய பல சோதனைகள் நடத்தினார். அவற்றிலே வானம்பாடி, மோஹினி, தாய் முதலியவை சிறப்பான வெற்றிகள். ஒரு இருபது வருஷ மெளனத்துக்குப் பிறகு அவர் மறுபடியும் சிறுகதைகள் எழுத இரண்டொரு வருஷமாகத் தொடங்கியிருக்கிறார். அந்தக் கதைகள்

52