பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பதிப்புரை

"சுவடு தெரிகிற தடத்திலே செல்ல மறுத்து, புதுத்தடம் போட்டுக் கொண்டு இலக்கியத்தின் எல்லைகளைச் சற்று விரிவடையச் செய்ய முயன்றவர்களைத்தான் சோதனைக் காரர்கள் என்று சொல்லலாம்." க.நா.சு.வின் இந்த வாக்கியத்தைத்தான் “எழுத்து" தன் குறிக்கோளாகக் கொண்டு தொடங்கப்படுகிறது என்று சி.சு. செல்லப்பா குறிப்பிடுகிறார்.

மேற்கண்ட வாக்கியத்தின்படி எழுத்துவின் குறிக்கோள் வெற்றி பெற்றதா, தோல்வி அடைந்ததா என்று 21ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பார்க்கும் போது வெற்றி பெற்றதாகவே கொள்ளலாம். ஏனென்றால் புதுக்கவிதையின் வளர்ச்சிக்கு தடம் அமைத்த பெருமை “எழுத்து"க்கு உண்டு. விழுதுகளைப் பல மடங்குகள் வளர்த்து ஆலமரக் காடுகளாக இன்றைய புதுக்கவிதை வளமுற்று செழித்து விளங்குவதற்கு 'எழுத்து'தான் அடிப்படையாகும். தான் எடுத்துக்கொண்ட கொள்கைக்கு ஏற்றவாறு எழுத்து'” சாதனை புரிந்ததினால், நவீன தமிழ் இலக்கிய வளர்ச்சியில் ஓர் மைல் கல்லாக அது இருக்கிறது.

"தீபம்" அலுவலகத்தில் 1965 முதல், கடைசி வரை சி.சு. செல்லப்பாவின் நட்பு தொடர்ந்து இருந்தது. சில நாட்களில் நா.பாவுடன் நானும் நடந்தே திருவல்லிக்கேணி பிள்ளையார் கோயில் தெருவில் இருக்கும் அவரது வீட்டிற்குச் சென்று அவரைச் சந்தித்து பேசியுள்ளோம். இலக்கிய சர்ச்சைகளுக்கு குறைவே இருக்காது. தரம் தாழாது, தனி மனிதனின் சொந்த வாழ்க்கையின் பண்புகள் கொச்சைப் படுத்தப்படாத உரையாடல்களாகத்தான் இருக்கும்.

தி.ஜ.ர., டாக்டர். மு.வ., கி.வா.ஜ., வல்லிக்கண்ணன் , பி.எஸ். ராமையா, தி.க.சி., நாரண. துரைக்கண்ணன், கு. அழகிரிசாமி போன்ற தலை சிறந்த தமிழ் அறிஞர்கள் 'தீபம் அலுவலகத்தில் வந்து சென்றவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். தா.பா. மறைந்த பிறகு இன்று வரை அவருக்கு நடைபெறும் நினைவக் கூட்டங்களில் தலைமை வகித்து நடத்தி வருபவர் வல்லிக்கண்ணன் ஆவார். சி.சு. செல்லப்பா ஒரு நினைவுக் கூட்டத்தில் கலந்து கொண்டு தனது நினைவுகளை எடுத்துக்கூறினார். வல்லிக்கண்ணனின் முத்து விழாவிற்காக அவரை அவரது இல்லத்தில் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு