பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————எழுத்து - சி.சு. செல்லப்பா

அப்படிச் சொல்லாதெங்கோ பாட்டி, உங்க மாதிரி பெரிய துணையில்லாட்ட.”

‘என்ன துணை வேண்டியிருக்கு. நீ இருக்கல்லியோ இப்போ தன்னந்தனியா. ஆயுக பூராவும் இவாளுக்கு உழைக்கிறது தான் மிச்சம், பாரு மணி ஒன்பதாகல்ல, பிள்ளையும் அவளுமா... ஏண்டி வாந்தியா எடுத்தே? ஓசை கேட்டது. என்ன உடம்போன்னு ஓடி வந்தேன்.”

'ஒண்ணுமில்லை. ஏதோ கொஞ்சம் மயக்கம் போல இருந்தது...’

‘நன்னாச் சொன்னே. கொஞ்சமாம்.’ ‘வீலு எங்கே திரும்பவும் சினிமாவுக்குப் போயிட்டாளா? இப்படித் தனியா இருக்கையே...”

‘பழக்கம் தானே பாட்டி. தனியா இல்லாமெ யாரு துணைக்கு வருவா. அவஅவாளுக்கு வேலையில்லையா...’ கல்யாணியின் குரலில் ஒரு நிதானம்தொனித்தது.

‘ஏண்டி, நீ குளிச்சு எத்தனை நாளாச்சு?? போங்க பாட்டி இந்த மாதிரி ஒவ்வொரு வாரமும் கேட்கிறேள்.”

‘இல்லேடி, பொங்கலுக்கு முந்தின எட்டாம் நாள் தானே ஸ்நானம் பண்ணினே. நன்னா நினைவிருக்கு. நீ கூட அப்போ சொன்னியே பொங்கலுக்கு உன் அகமுடையானுக்கு லீவ் இருக்கும்னு.’

ஆமாம் நாலுநாள் லீவ் இருந்தது. வழக்கம்போல ஆபீஸ் கட்டுகள்கொண்டு வந்தார். பண்டிகை முடிந்ததும் திரும்பியும் காம்ப்போயிட்டார்.

'சரிதான். பொங்கல் தாண்டி, பெளர்ணமி தாண்டி பத்து நாளாச்சே. கல்யாணி நீ புண்ணியசாலி. அம்மா பரதேவதே! மஹேஸ்வரி குழந்தை சிறிசு நன்னாப் பெத்து பிழைக்கட்டும். அம்மாடி, நன்னா இதை கவனிக்காம இருந்தேன்.'

கல்யாணிக்கு ஏதோ மனதில் திகில் தோன்றிற்று.

60