பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————வல்லிக்கண்ணன்

‘என்ன பாட்டி ரொம்ப அமர்க்களம் செப்றேள், ! என்றுசொல்லித் தன் குழப்பத்தை மறைக்க முயன்றாள்.

அமர்க்களம் தாண்டியம்மா, இன்னமே அமர்க்களம்தான். இரு நீ தனியா இருக்கக்கூடாது. நானாவது கூட வந்து படுத்துக்கிறேன், என்று சொல்லிவிட்டுபாட்டிவீட்டுக்குப்பறந்தாள்.

பாவம், பாலம்மாளை ஏன் எழுப்புகிறாள் என்று கல்யாணி இரங்கினாள். பக்கத்துவிட்டுத் திண்ணையில் மாமியாரும் மருமகளும் அவசரமாக ரகசியமாய்ப் பேசிக்கொண்டிருந்தார்கள்.

‘... நான்தான் நேத்தே சொன்னேனே அவ முகமெல்லாம் அழகிட்டுக் களையாயிருக்குன்னு.

கேக்கனுமா. நிறம், வயசு எல்லாம் நிறைந்திருக்கு. சரி நீ கதவை மூடிக்கோ, நான் அங்கேயே படுத்துக்கிறேன். என்று முடித்துவிட்டு பாட்டி வந்தாள்.

எழுபது வயதுக்கு மேல் என்றுதான் சொல்லலாம். ஆனால் முப்பது வயதுப் பெண்போலப் பாட்டி சுறுசுறுப்பாயிருந்தாள். பாட்டியின் பரபரப்பைப் பார்த்துகல்யாணிக்கு வேடிக்கை ஒரு புறம்: குழப்பம் ஒரு புறம்.

‘இந்தாடி குட்டி; நான் கதவண்டை படுத்துக்கிறேன். அவர் வரும்போது நானே கதவைத் திறக்கிறேன். நீ நிம்மதியாகத் துங்கு.

ஆனால் பாட்டி கல்யாணியைத்துங்கவிடவும் இல்லை. கல்யாணிக்கும் நிம்மதியான தூக்கம் வரவும்இல்லை.

பாட்டிதன்னுடைய முதல் பிரசவத்திலிருந்து தன்குடும்பத்தார் ஒவ்வொருவருடைய பிறவியைப் பற்றியும் பூரண விவரங்களுடன் வர்ணிக்க ஆரம்பித்துவிட்டாள்.

நல்ல வேளையாக கல்யாணியின் காதில் அவ்வளவும் விழவில்லை. பாட்டியின் புள்ளிவிவரங்களில் கண்ட, காய் விழுந்த கேஸ்கள், ஆயுத கேஸ்கள், ஆஸ்பத்திரிக் குடித்தனம் எல்லாம் கல்யாணிக்கு வெறும் வார்த்தைகளாகவே பட்டன. அவளுடைய எண்ணங்கள், நத்தைபோல் சுருங்கி மனதின் நிலவறைக்குள் ஓடி ஒளியத் தொடங்கின.

61