பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————வல்லிக்கண்ணன்

முடிவுக்குவருவது ஒருவழி. இவைகளுடன் அந்த நூல் இலக்கிய மரபு வழியே எந்த அளவுக்கு உருவாக்கப்பட்டிருக்கிறது என அந்த மரபு லக்ஷணங்களை பிரயோகித்துப் பார்த்து பாண்டித்ய முறையில் பார்ப்பதும் உண்டு. இறுதியாமேலே குறிப்பிட்ட கேள்விகள் எதுவும் கேட்காமல், அந்த நூலின் சில தன்மைகளை புறநிலை நோக்காக மெய்ப்பித்து காட்டுவது முதல், அந்த நூல் விமர்சகனை ஒரு நுண் விசாரணைக்காரனை எவ்விதம் உறுத்துகிறது என்று தன் மனப்பதிவு ரீதியாக வெளிப்படுத்திச் சொல்வது வரை உள்ள பல்வேறு முறைகளில் ஒன்றைக்கொண்டு பார்த்து வாசகனுக்கு குணங்காண்கிற சக்தியை அதிகரிக்கச் செய்யும் உத்தேசத்தை மட்டும் கொண்ட முறையும் இருக்கிறது.

இந்த முறைகளையும் அவைகளை கையாளுவதன் விளைவாக கிடைக்கும் பயன்களையும் கோட்பாடு வழியாக ஆராய இப்போது இடம் இல்லாததால் இத்தனை விதமானநோக்குகளுக்கு ஒரு இலக்கிய நூல் சோதனைக்கு உள்ளாகிறது என்பதை மட்டும் கொண்டால் போதும். எட்வர்ட் டெய்ச்சஸ் என்ற விமர்சன நூலாசிரியர் கூறியுள்ள மாதிரி இலக்கியக் கோட்பாடுகளை பரிசீலிப்பது என்பது உன்னதமான தத்துவஞான முறை; ஆழ்ந்த கருத்தமைந்த காரியம். இலக்கியத்தின் தன்மை பற்றி விளக்கக்கூடியது மட்டுமல்ல. தனித்தனி இலக்கியப் படைப்புகளை படித்து இன்னும் அதிகமாக ரசிக்கவும் அறியவும் உதவுவதாகும். இலக்கிய கோட்பாடுகளோடு சம்பந்தம் இல்லாமலேயே ரசனை இருக்கலாம். ஆனால் இலக்கிய கோட்பாடுகளின் பெருக்கமும் பிரயோகமும் ரசனையில் ஒரு தெளிவும் குறித்த பார்வையும் உயர்வும் ஏற்பட உதவும்.

கதை

‘கமலாம்பாள் நாவலின் சுருக்கம் இதுதான். மதுரை ஜில்லாவின் ஒரு கிராமத்தில் லட்சிய கிரஹஸ்தராக.உலகத்தின் புன்னகை விழ சுகபோக வாழ்வு வாழ்ந்துவரும் முத்துசாமி அய்யர் ஒரு சீரிய குணம் படைத்தவர். ஆனால் நிலைமை சடக்கென மாறி விடுகிறது. எதெதெல்லாம் அவர் பிரியமானது என, கருதி இருந்தாரோ எதோடெல்லாம் அவருக்கு உறவு இருந்ததோ

71