பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————எழுத்து - சி.சு. செல்லப்பா

அதெல்லாம் அவருக்கு எதிராக திரும்பிவிடுகிறது. அடுக்கடுக்காக துன்பங்கள் தொடர்கின்றன. அவரது ஒரே பிரிய தம்பி தன் மனைவியால் மருந்து வைக்கப்பட்டு அவள் வசமாகி விரோதமாகி விடுகிறார். ஜெல்லிக்கட்டில் அவர் தம்பியின் ஏற்பாட்டால் மாடு பிடிபட்டதால் மனம் பொங்கிய ஜமீன்தாரின் துண்டுதலால் பேயாண்டித் தேவன் தம்பியின் சொத்தை கொள்ளையடிக்க, தான் முன் நின்று அவனைப் பிடிக்க ஏற்பாடுசெய்து கேஸ் நடத்தப்போய் அவன் விரோதம் ஏற்பட்டுவிடுகிறது. அவன் பழி வாங்க முத்துசாமி அய்யரது ஆண் குழந்தையைப் திருடிப் போய்விட, புத்ர சோகத்தில் ஆழ்ந்து, தன்தர்ம பத்தினி கமலாம்பாளுடனும் கல்யாணமான பெண் லக்ஷிமியுடனும் விரக்தியுடன் வாழ்ந்து வருகையில், தன் சகோதரன் சுப்ரமண்ய அய்யரும் இறந்துவிட, பம்பாயிலிருந்து அவர் நடத்திய வியாபாரம் முறிந்து பெரிய ந்ஷ்டம் ஏற்பட இருக்கும் செய்தியும் வருகிறது. அவர் பம்பாய்க்கு புறப்பட்டுச் சென்றிருந்த சமயம், இன்னும் அந்த குடும்பத்தை கெடுக்க சூழ்ச்சி புகழ்பெற்ற அந்த கிராமப் பெண்கள் வம்பர்மகாசபையில் உருவாகி, கமலாம்பாளைப் பற்றி அபவாதச் செய்தி பம்பாயிலிருந்து திரும்பிவரும் வழியில் சிதம்பரத்தில் தங்கும் முத்துசாமி அய்யரது காதில் விழச் செய்யப்படுகிறது. புத்திரனையும் இழந்து, பம்பாய் திரவிய நஷ்டமும் ஏற்பட்ட நிலையில், மனைவியைப் பற்றிய இந்த அபவாதச் செய்தியும் காதில் விழ , நம்பி, உலகத்தை வெறுத்து தற்கொலை செய்துகொள்ளப்போகும் சமயம் ஒரு பிரகாசம் தோன்றுகிறது. அவரை அழைத்து, தடுத்து ஒரு திவ்ய மகாபுருஷன் அபயப்பிரதானம் கொடுத்து ஞானோபதேசம் செய்துதன்னோடு அழைத்துச் செல்கிறார். இதற்கிடையே கணவன் திரும்பி வராதது கண்டு தன் மகள் லக்ஷ்மி, மாப்பிள்ளை ஸ்ரீநிவாசன் இவர்களுடன் சிதம்பரத்துக்கு அவரைத் தேடி கமலாம்பாள் செல்ல, இடை ஸ்டேஷன் ஒன்றில் இறங்கிய ஸ்ரீநிவாசன் கைது செய்யப்பட்டு தெரியாத இடத்துக்கு கொண்டு செல்லப்படுகிறான். அவனைக் காணாது ரயிலில் உள்ளவர்கள்துடித்துக் கொண்டிருந்த சமயம் வெள்ளப் பெருக்கால் பாலம் உடைந்து ரயில் விழுந்து பயங்கர விபத்து ஏற்பட்டு விடுகிறது. கமலாம்பாளும் லக்ஷ்மியும், சுந்தரமும் கரையோரம் ஒதுக்கப்பட்டு மூர்ச்சையுற்றுக் கிடக்க, அந்த சமயம்

72