பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————வல்லிக்கண்ணன்

அங்கு வந்த அவர்கள் கிராமப் பழைய தமிழ் பண்டிதரான அம்மையப்ப பிள்ளை அவர்களை அடையாளம் கண்டு, துக்கிச் சென்று, மூர்ச்சை தெளிவிக்க அங்கிருந்து சில நாட்களில் யாவரும் சிதம்பரத்துக்கு முத்துசாமி அய்யரைத் தேடிப் போகிறார்கள்.

தனக்கு ஞானம் உணர்த்திய சச்சிதாநந்த சுவாமியுடன் முத்துசாமி அய்யர் வழிநடந்து சென்னை திருவொற்றியூர் வந்து சேர்ந்து, ஆண்டவனுடைய கல்யாண குணங்கைளப் பற்றிய வாயாரப் பேசிக்கொண்டு இருக்கையில், சிதம்பரத்தில் அவரைக் காணாமல் கமலாம்பாள் முதலியவர்கள் சென்னைக்கு வந்து, முன்பு மாப்பிள்ளை ஸ்ரீனிவாசன் இருந்த வீட்டில் தங்கி இருக்கும் சமயம், அம்மையப்ப பிள்ளை ஊரெங்கும் அலைந்து தேட, திருவொற்றியூரில் இருக்கும் மகானைப் பற்றிக் கேள்விப்பட்டு விசாரிக்கலாம் எனப் போய்ப் பார்க்க அதற்குள் அவர்கள் அதைவிட்டுப் போய் விடவே, வடக்கே காசி நோக்கிப் புறப்பட்டு விட்டார்கள்.

இங்கே இப்படி இருக்க, குற்றம் செய்த வேறு ஒருவருடைய சாயலாக இருந்ததால், தவறாகப் புதுச்சேரி சிறையில் அவதிப்பட்ட ஸ்ரீனிவாசன் விசாரணையில் உண்மை வெளியானதின் பேரில் விடுதலை பெற்று தன் நண்பனுடன் காசிக்குப் புறப்பட்டுச் செல்கிறான். சச்சிதாநந்த சுவாமியும் முத்துசாமி அய்யரும் காசிக்கு வந்து சேருகிறார்கள். ஆக கதை முடியும் கட்டத்திற்கு வருகிறது. காசியில் ஒரு மடத்தில் அவர்கள் தங்கி இருக்கும், சமயம் கிராமத்திற்கு திரும்பி வந்த பேயாண்டித் தேவன் அந்த குடும்பம் சீர் குலைந்ததை அறிந்து வருந்தி பரிகாரம் செய்ய, அவரைத் தேடிப் புறப்பட்டுச்செல்கையில் ஒரு ஊரில் ஒரு வீட்டுத்திண்ணையில் இரவு படுத்து இருந்தபோது உள்ளே பேசிய குரல்களிலிருந்து பம்பாயில் முத்துசாமி அய்யரின் சொத்தை கொள்ளையிட்ட இருவர் எனத் தெரியவர, போலீஸ் உத்யோகஸ்தரைப் போல நடித்து மிரட்டவும் அவர்கள் பணம் புதைத்துவைக்கப்பட்டிருந்த இடத்தைக் காட்ட, பணத்துடனும் அவர்களுடனும் காசி அடைந்து முத்துசாமி அய்யர் முன் வைக்கிறான். அது மட்டுமின்றி முத்துசாமி அய்யர் மடியில் உட்கார்த்திருந்த ராமசேஷய்யர் என்பவரின் குழந்தைதான் காணாமற்போனமுத்துசாமி அய்யரின் குழந்தை என்பதையும் துப்புத் துலக்குகிறான்.

73