பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————எழுத்து - சி.சு. செல்லப்பா

அதே சமயம் சச்சிதாநந்த சுவாமிகளை தரிசிப்பதற்காக கமலாம்பாளும், அம்மையப்ப பிள்ளையும் மடத்துக்குப் புறப்பட்டுச் சென்றதும், அந்த வீட்டு வாசல்திண்ணையில் வந்து உட்கார்ந்த இருவர்களும் ஸ்ரீனிவாசனும் சுப்பராயனுமாக இருப்பதை வீட்டு உள்ளிருந்து வந்த லக்ஷிமி அறிந்து யாவரும்ஆநந்தப்பட்டு மடத்துக்கு வந்த சமயம், மடத்தில் கணவனைக் கண்ட கமலாம்பாள் அவர் பாதத்தில் வீழ்ந்து மூர்ச்சித்து கிடப்பதையும் முத்துசாமி அய்யரும் கடவுளின் மாயையைக் கண்டு சிரிப்பதாஅழுவதா எனத் தெரியாமல் பிரமத்தில் லயித்துப் பரவசமாக இருப்பதையும் பார்க்கிறார்கள். இப் படியாக பலபேருடைய பல நாள் துயரம் பகவானுடைய கிருபையால்ஒரே இடத்தில் ஒரு நாழிகையில் நிவர்த்தி ஆகிறது. எல்லோரும் ஊர்திரும்பி முத்துசாமி அய்யர் இல்லறத் துறவில் வாழ்க்கை நடத்த, கமலாம்பாள் ராமத்யான ஆநந்த வைபவத்தில் முழுகி இருக்க இப்படியே நல்லவர்கள் சுகமாக வாழ, கெட்டவர்கள் அவரவர் பாபத்துக்கு அநுபவிக்க, கதை முடிகிறது.

கதையம்சம் பற்றி

இந்த கதைச் சுருக்கத்தினால், நாவலை படித்து முடித்ததும் கிடைத்த சாராம்சத்தினால், இன்றையக் கண் கொண்டு பார்த்த அளவுக்கு கதையம்சம் சம்பந்தமாக சிறப்புகளைவிட குறைகள்தான் முன்னுக்குத் தெரியவந்தன. ஒரேநிதானமாக வளர்ந்துகதை மத்திக்கு வந்த பின், பின் பாதி ஒரே வேகத்தில் சரிந்து விடுகிறது. அது மட்டமல்ல. யதார்த்தத்தனமான நடப்புகள் மாறி சட்டென அற்புதம் நிகழ்வதும், எப்படியும் எல்லாம் சரியாகிவிட வேண்டும் என்ற ஒரு முடிவுக்கு வற்புறுத்திச் செல்வது போல துக்க சம்பவங்களை அடுக்கி,வற்புறுத்தித் திணித்து, பொருத்தமில்லை என்று நமக்குப் பட்டுகூடுமோ, என, வாசகனுக்கு சந்தேக்கு தெளிவுக்கு பின் விளக்கங்கள் சமாதானங்கள் கூறுவதும் சினிமா மாதிரி எல்லாவற்றையும் ஒரே இடத்திற்கு தக்க ஆதாரம் காட்டாமல் கொணர்ந்து சேர்த்து முடித்ததும் ஆகிய குறைகள் பளிச்சென தெரிய வருபவை. உண்மையில் கதையம்சத்தைக் கொண்டு இது ஒரு சுத்தமான யதார்த்தவாக நாவல் என்று சொல்லத்தோன்றவில்லை. போகப் போக யதார்த்த தன்மை விழுந்துபோய் அதிசயோக்தித்

74