பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————வல்லிக்கண்ணன்

தன்மைதான் நாவலில் அங்கங்கே இடம் பெற்று விடுகிறது. ஆனால் நாவல் யதார்த்தமான ஒரு முடிவுக்குத் தான் வந்திருக்கிறது.

இதனால், இது ஒரு சிறந்த நாவல் இல்லை என்று ஆகிவிடுகிறதா? நான் வேறொரு இடத்தில் கூறி இருப்பது போல, நாவலோ சிறுகதையோ, நாடகமோ எதற்கும், கதையம்சம் அவசியமானது தான் ஆனாலும் கதையம்சத்தின் பங்கு ஓரளவுதான். அது நீங்கலாக, உருவம், உத்தி, கற்பனை, திருஷ்டி, தீட்சண்யம்,புதிய நோக்கு, சொல்வழியில் நூதனம், கொடுக்கும்புதிய திருப் ம்,புதிய லட்சணங்கள் ஏற்றுதல், பாஷைநயம், புதுப் புது படி மங்கள், அநுபவவெளியீடு, உணர்ச்சி, சிந்தனைப் போக்குத் தோரணை, தத்துவம், அழுத்தம், கனம், ஆழம் வன்மை, வலியுறுத்தல் இத்யாதி சிறப்பு அம்சங்களின் பங்கும் சேர்ந்துதான் செழுமைப் பொருளாக ஆகிறது ஒரு இலக்கியப் படைப்பு. ஆக, இத்தனையையும் ஒரு நாவலில் சோதித்துப் பார்த்துத்தான் முடிவுகட்ட வேண்டுமே ஒழிய கதையம்சம் ஒன்றை மட்டும் ஆழம் கொண்டு தர நிர்ணயம் செய்ய முடியாது. இவைகளுடன் ஆசிரியனின் நோக்கத்தையும் மனதில் வாசகன் கொள்ளவேண்டி இருக்கிறது. இந்த நாவலைதான் எழுதுவதின் உத்தேசத்தைப் பற்றி நாவலாசிரியர் பிற் கூற்றாக புஸ்தகததில் எழுதியுள்ள சில வரிகளைப் பார்ப்போம். அந்த வரிகள் சில முக்கிய கருத்துக்களை தெரிவிப்பதாக இருக்கின்றன. அந்த நாவலை நாம் எப்படி அணுக வேண்டும் என்று நம்மிடமிருந்து எதிர்பார்ப்பது போல, நமக்கு உணர்த்துவது போல இருக்கின்றன. அவர் கூறி இருக்கிறார் :

ஆசிரியர் உத்தேசம்

இப்பொய்க்கதையை இதுகாறும் பொறுத்தருளிய நேயர்காள் நும்பெரும் பொறுமைக்கு என் பெரும் வந்தனம். இக்கதை பெரும்பான்மையும் பலவித மனோசஞ்சலத்தின் மத்தியில் எழுதப்பட்டதாதலால் அழகுகுன்றி 'குன்றக்கூறன்மிகைபடக்கூறல்' முதலிய பீரைங்குற்றங்களுக்கும் குடியாயுளது...”

‘இது நிற்க, இச்சரித்திர மெழுதுவதில் எனக்குக் கதையே முக்கிய கருத்தன்று. மற்றென்னையோ வெனில் பகவானது மாயா

75