பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



ஆன்மீக அக்கறை

இந்த பிற்கூற்று முற்கூற்றுகளில் தன் உத்தேசத்தைக் குறிப்பிட்டிருப்பதுபோலவே, கதை நெடுக,இதை ஒட்டிய ஆன்மீகக் கருத்துக்களை தன் கதாபாத்திரங்கள் வாயாலும், தன் வாயாலேயும், பல இடங்களில் சந்தர்ப்பம் கிடைத்த போதெல்லாம் வலியுறுத்த நாவலாசிரியர் தவறவேயில்லை. வெறுமனே தத்துவ உபதேசத்திற்காக மட்டும் இல்லாமல் கதாபாத்திரங்கள் தங்கள் செயல்கள் மூலம் கூடச் செய்யும் ஒரே சிரத்தை கதை நெடுக காண்கிறது. இந்த துன்பமே கடவுளைப் பற்றி நினைக்க செய்வதினால் நமக்கு ஒரு பெரிய அநுகூலமாக இருக்கிறது என்று கமலாம்பாள் எண்ணிச் சொல்கிறபடி துக்கத்தின் மேல் துக்கமாக வந்து விழவிழ மனித சுபாவம் பண்படுகிறது? பக்குவப்படுகிறது. சோதனைக் குள்ளாகிய ராமன், அரிச்சந்திரனைப் போல, சீதை சந்திரமதியைப் போல, முத்துசாமி அய்யரும் கமலாம்பாளும் இந்த ஜன்மத்தில் யாதொரு தவறும் செய்தறியாதவர்கள் ஆனாலும் கர்மாவின் கைக்குள் சிக்கி உழன்று அநுபவத்திடையே ஞானம் பெற்றவர்கள். முத்துசாமி அய்யர் சிந்திக்கிறபடி மனிதன் அநுபவிக்கவே பிறந்தவன். சுவாமி அநுபவிக்க சக்தியும் கொடுத்து அவ்வனுபவம் சுலபத்தில் கிட்டாதபடி பலமான தடைகளையும் ஏற்படுத்தி இருக்கிறார். நாம் ஒரு மாமிசத்துண்டை நாய்க்குக் காட்டி துர வீசியெறிந்து விளயைாடுவதுபோல சுவாமி நம்மை சோதனை செய்து விளையாடுகிறார். அர்ச்சுனை வலியச் சண்டைக்கிழுத்து அவனோடு கைகலந்து சண்டை போட்டல்லவோ அவனுக்கு பாசுபத அஸ்திரம் கொடுத்தார் என்றபடி சோதனைக் குள்ளாகி கடவுள்அனுக்கரகத்தாலேயே மீட்சி பெற்றவர்கள்.

தன் நாவல் பற்றி...

வாழ்க்கையைப் பற்றிய இந்தநோக்கைக் கொண்டு, மனித சுபாவம் எவ்விதமெல்லாம் சந்தர்ப்பங்களில் அக, புறச் சூழ்நிலைகளால் பாதிக்கப்படடு உயர்ந்தும் தணிந்தும் போய் ஒரு நிலைக்குவருகிறது என்பதைத்தான்.இந்த நாவல் மூலம் ராஜமைய்யர்

77