பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————எழுத்து - சி.சு. செல்லப்பா

எடுத்தக்காட்டி இருக்கிறார். அவரது வேதாந்தக் கருத்துக்கு விளக்கமாக அமைந்ததுதான் இந்த நாவல் என்று சொல்ல வேண்டும். முதன்மையாக, சித்தாந்த ரீதியாகத் தான் இந்த நாவலைப் பார்க்கவேண்டுமென்பது நாம் கதையைப் படித்து முடிவுக்கு வந்தது மட்டும் அல்ல. ஆசிரியருடைய வார்த்தைகளான இச்சரித்திர மெழுவதில் எனக்குக்கதையே முக்கியக் கருத்தன்று’ என்று ஆரம்பிக்கும் வரியே நம்மை எச்சரித்து விடுகிறது. எனவே அவரது கதையில் நாம் காணும் குறைகளை ஆசிரியர் முன் கூட்டியே யூகித்து, அதில் வேறுவித பார்வைகள் மூலம் குறைகள் காணக்கூடும் என்பதாலேயே தன் எல்லையை வகுத்துக் கொண்டிருக்கிறார். ‘இப்பொய்க் கதை’ என்று சொல்லும் போது தன் கற்பனை உருவம் நிஜமாக நடந்தல்ல என்பதை மட்டும் உணர்த்தாமல் கலாரீதியாகவும் அதில் பொய் இருப்பதற்கு இடம் இருப்பதைப் பற்றி பிரஸ்தாபிக்கிறார். இந்த யூகத்திற்கு வலுக்கொடுப்பது போல இக்கதை பெரும்பான்மையும் பலவித மனோசஞ்சலத்தின் மத்தியில் எழுதப்பட்டதாதலால் அழகு குன்றி குன்றக் கூறன் மிகைபடக்கூறல் முதலிய யீரைங் குற்றங்களுக்கும் குடியாயுள்ளது என்ற பின் வரிகள் இருக்கின்றன. அடக்கமாகச் சொல்லப்பட்ட வார்த்தைகள் என்பதற்கு மேலாக தன் உத்தேசத்தின், எல்லை வரையறுப்பின் பலனாக, தன் நாவல் சில அம்சங்களில் கலைத் தன்மை பாதிக்கப்பட்டிருப்பதை உணர்ந்து கூறியதாகத்தான் படுகிறது.


சிறுகதை, ஓரங்க நாடகம், நாவல், கட்டுரைகள் ஆகிய துறைகளில் கால் நூற்றாண்டுகாலமாக படைப்பில் ஈடுபட்டிருக்கும் சிதம்பர சுப்ரமண்யன் 1912ல் பிறந்தவர். ராமானாதபுரம் ஜில்லாவில் உள்ள மழவராய நேந்தல் அவரது ஊர். சக்ரவாகம், சூரியகாந்தி, வருஷப்பிறப்பு ஆகிய சிறுகதைத்தொகுதிகளும், ஊர்வசி என்ற நாடகத்தொகுப்பும், இதயநாதம்’ என்ற நாவலும் வெளிவந்திருக்கின்றன. அவரது புது நாவல் ஒன்று சமீபத்தில் வெளிவர இருக்கிறது. தற்போது சென்னையில் வாஹினி ஸ்டுடியோ, விஜயா புரொடக்ஷன்ஸ் மானேஜராக வேலை பார்த்து வருகிறார்.


78