பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————எழுத்து - சி.சு. செல்லப்பா

கண்யக் குறைவாகக் காணப்படும் ஒருவன் கையில் இருந்தால் அது திருட்டுச் சொத்தாயிருக்கும் என்று ஒருவரும் வாங்கத் துணியமாட்டார்கள். அப்படியே வாங்க முன் வந்தாலும், அதர்ம விலைக்குத்தான் கேட்பார்கள். ஆனால், அதே கல் ஒரு பெரிய தனவந்தன் கையிலோ, அல்லது ஒரு ரத்ன வியாபாரி கையிலோ இருந்தால் அதன் மதிப்பு ஏறிவிடுகிறது. அதற்கு நியாயமாக உள்ள விலையை விட அதிக மாகவே கொடுத்து வாங்கத் தயங்க மாட்டார்கள். நிலையைப் பெருத்து விலை பார்க்கப் போனால் விலை யென்பதே இந்த நிலையை அடிப்படையாகக் கொண்டதொரு பொருள்தான். இந்த தத்துவத்தைத்தான். ஆங்கிலத்தில் மதிப்பு என்று சொல்லுவார்கள். நம் நாட்டில் அதற்கு இஷ்டம், பயன், புருஷார்த்தம் , உறுதிப் பொருள் என்று சொல்லி வந்திருக் கிறார்கள்.

இந்த மதிப்பு மாறக் கூடியது என்று பார்த்தோம். நிலை மாறும் பொழுதுதான் மாறும் என்பதில்லை. காலம் மாறும்பொழுதோ, அல்லது இதர காரணத்தாலோ இவை மாறவும் மாறலாம். காப்பி நமக்குப்பிடித்தவஸ்துதான். ஆனால் பித்தம் அதிகமாகி வாந்தியாகிக் கொண்டிருக்கும் பொழுது, காப்பியை நினைத்தாலே, வாந்தி யாகிறது. இல்லையா? நம் தேகத்தின் நிலை மாறிவிட்டதால் அதன் ருசி மாறிவிடுகிறது.

எல்லா மனிதர்களுக்கும் பொதுப்படையாகத்தான் இந்த மதிப்புக்கள்இருக்கும் என்பதற்கில்லை. மனிதனுக்கு மனிதன் இவை மாறிக் கொண்டும் இருக்கலாம். ஒரு மனிதன் போற்றும் ஒருபொருள் மற்றொருவனுக்கு அது சாதாரணமான தாயிருக்கலாம். உங்களுக்குத் தான் சேலம் மாப்பிள்ளையின்கதை தெரியுமே. சேலம் மாப்பிள்ளை தஞ்சாவூர் ஜில்லாவிலே பெண் எடுத்திருந்தான். மாப்பிள்ளைக்கு விருந்து கேழ்வரகுக் களி செய்து வைத்திருந்தார்கள். மாப்பிள்ளைக்குத் தூக்கிவாரிப் போட்டது. அவன் மாமனார் வீட்டிலே நல்ல அரிசிச் சோறு சாப்பிடலாம் என்று கனவு கண்டு கொண்டிருந்தான். ஏனென்றால், சேலம் ஜில்லாவில் தினந்தோறும் கேழ்வரகு சாப்பிட்டுச் சாப்பிட்டு அலுத்துப் போயிருந்தது. ஆனால் தஞ்சாவூர் ஜில்லா மாமனார் வீட்டிலே கேழ்வரகு தினசரி உபயோகத்தில் இல்லாத பொருள். ஆகவே, அவர்களுக்கு அருமையான அந்தப் பொருளை மாப்பிள்யைக்கு வேண்டுமென்று தயார் செய்தார்கள். மாப்பிள்ளை இலையில் இருந்த களியைப்

80