பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————வல்லிக்கண்ணன்

பார்த்து, வணங்கிவிட்டு “சர்வ வல்லமையுள்ள களியப்பா, நான் உன்னைவிட்டு ஓடி வந்தாலும் இங்கேயும் என்னைத் துரத்திக்கொண்டு வந்துவிட்டாயே” என்று சொல்லிவிட்டு வாயில் களியைப் போட்டுக் கொண்டானாம். ரஸமான கதை. எல்லா மனிதர்களும் ஒரு பொருளில் ஒரே மாதிரியான மதிப்பைக் கொடுப்பதில்லை என்பதற்கு நல்ல உதாரணம்.

இந்தத் தத்துவத்தை மனத்தில் வைத்துக் கொண்டு வாழ்க்கையின் பயன் என்ன என்று எடைபோட்டுப் பார்க்கலாமா? வாழ்வின் மதிப்பு என்ன? அதனால் ஏதேனும் பயன் உண்டா? மனிதன் எதற்காக வாழ்கிறான்? அவன் வாழ்விலே அடைய விரும்பும் பொருள்கள் யாவை? அவைகளின் தன்மை என்ன? அவைகளின் மதிப்பு என்ன? ஒரு தொழிலாளியின் உதாரணத்தை எடுத்துக்கொள்ளலாம். ஒரு தொழிற்சாலையில் ஒருநாள் எட்டுமணி நேரம் வேலை செய்கிறான். அவன் செய்யும் வேலைக்குத் தகுந்தாப் போல்,ஊதியம் கிடைக்கிறது. ஆனால் ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையும் காலவரை நிர்ணயிக்கப்பட்டதுதான். வாழ்விலே அதைப் போலவே, என்ன பயனைப் பெறுகிறோம்? இந்த வயிறு வளர்க்கும் காரியத்தைத் தவிர வேறு ஏதாவது மனிதரிடம் நாம் எதிர்பார்க்கலாமா? அவன் வாழ்வு, கேவலம் வயிறு வளர்ப்பதுடன் முடிவடைந்துவிடுகிறதா? அதற்கு மேலும் அவன் செய்ய வேண்டிய, செய்திருக்கிற அல்லதுசெய்ய முயற்சிக்கிற காரியங்கள் ஏதாவது உண்டா? அல்லது வாழ்வே, பயனற்ற ஒரு காரியம் தானோ?

மாக்பெத் சொன்னான்:

‘வாழ்க்கையா - அது ஒருநடமாடும் நிழல்.

காத்தடித்துவிட்டுப்போன கோமாளியின் ஆட்டம்

கூச்சலும் கோபமும் மிகுந்து நிற்கும் பித்தன்

சொன்னதொரு பொய்க்கதை’

மாக்பெத்தைப் போலவே, ஒவ்வொருவரும் ஏமாற்றமோ தோல்வியோ அடையும் காலத்தில் “சீ இதென்ன பைத்யக்கார வாழ்க்கை’ என்று கசந்து கொண்டிருக்கிறோம். இதென்னபயனற்ற வாழ்வு என்று சில சமயங்களில் மதித்து, வாழ்விலே துக்கத்தைத் தவிர வேறு ஒன்றும் கிடையாதா, அதுதான் வாழ்வின் பயனா, என்றும் யோசித்திருக்கலாம். அல்லது உமார் காயத்தைப் போல்,

81