பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————எழுத்து - சி.சு. செல்லப்பா

இன்றைக்கின்றைக் கென்றோயாது

இரவும்பகலும் உழைத்திடுவர்

அன்றி நாளைக்காமெனவே

அலுப்பில்லாது முயன்றிடுவர்

ஒன்றுசொல்வேன் உண்மைமொழி

உறுதியாகக் கொள்வீரே

என்றும்மூடர் நன்மையுமக்கு

இங்கும் இல்லை அங்கும் இல்லை.

என்று ஆணித்தரமாகத் தீர்மானிக்கலாம்.

இதற்கு நேரிடையான அபிப்ராயங்களும் இல்லாமல் இல்லை. வாழ்வு கிடைத்தற்கரிய பெரியபாக்யமென கருதியவர்களும் உண்டு. இந்த அரிய வாழ்வைப் பெற்றோமே என்று பெருமைப் பட்டு மகிழ்ச்சி கொண்டவர்களும் இருக்கத் தானிருக்கிறார்கள். மனித வாழ்க்கை பற்றி ஒளவைப் பிராட்டி சொல்வதைக் கொஞ்சம் கேட்கலாம்.

அரியதுகேட்கின் வரி வடிவேலோய் அரிதரிது மானிட ராதலரிது மானிடராயினும் கூன்குருடு செவிடு பேடுநீங்கிப் பிறத்த லரிது பேடுநீங்கிப் பிறந்த காலையும் ஞானமும் கல்வியும் நயத்தலரிது ஞானமும் கல்வியும் நயந்த காலையும் தானமும் தவமும் தான்செய்தலரிது தானமும் தவமும் தான்செய்வாராயின் வானவர் நாடு வழிதிறந்திடுமே.

பாரதியார் உலகத்தைப் பித்தன் சொன்னகதையாக வெறுத்துத் தள்ளவில்லை. என்ன அற்புதமான வாழ்க்கையடா என்று அதிசயித்து அனுபவித்துத் தான் பாடியிருக்கிறார்.

ஒவ்வொரு நிலையில் நின்று பார்க்குபொழுது வாழ்வும் அதன் பயனும் கூட ஒவ்வொரு மாதிரியாகத் தோன்றுகிறது. ஆகவே, இந்த Value என்ற மதிப்பிடும் அம்சத்தை எதை வைத்துத் தான் நாம் ஆராய்வது?

82