பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————வல்லிக்கண்ணன்

பொதுவாகப் பார்த்தால் மக்கள்பொருளோடு ஒட்டிய வாழ்வைத்தான் ஒரு அளவு மதிப்பிடுகிறார்கள் என்பது நமக்கு நன்கு விளங்குகிறது. ஒரு உதாரணத்தை எடுத்துக் கொள்ளலாம்.

நண்பர் ஒருவர் நம் வீட்டிற்கு வருகிறார். அவருடன் பேசிக்கொண்டிருக்கிறோம். நம் வீட்டிலிருக்கும் பெரியவர் உள்ளிருந்து வருகிறார். வந்த நண்பரை அவருக்கு அறிமுகப்படுத்தி விடுகிறோம். நண்பரை என்ன உத்யோகம் என்று கேட்கிறார். நண்பர் பதில் சொல்கிறார். என்ன சம்பளமோ என்று கேட்கிறார் பெரியவர். நமக்கு தர்ம சங்கடமாயிருக்கிறது. நண்பர் எதையோ மென்று ‘முழுங்கிச் சொல்கிறார். பெரியவர் நண்பரை எடை போட்டுவிட்டார். பெரியவர், வந்தவரின் படிப்பையோ, குணத்தையோ, இதர யோக்யதைகளையோ பற்றி அறிய அக்கறை கொள்ளவில்லை. அவர் முகத் தோற்றத்தைக் கூட அவர் மனத்தில் வாங்கினாரா என்பது சந்தேகம்தான். ஆனால் வந்தவரின்தன்மையை அறியக் கூடிய ஒரே உரைகல்லில் உரைத்துப் பார்த்துவிட்டார் அல்லவா?

இதையும் பார்க்கலாம். எங்கள் காரியாலயத்திற்கு ஒரு நண்பர் வந்திருந்தார். நாங்கள் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே, ஒருவர் காரில் வந்து இறங்கினார். நண்பர் அவரைக் கவனித்துப் பார்த்துவிட்டு ‘இந்தப் பெரிய மனிதர் யார் என்றார்.

‘அவர் பெரிய மனிதர் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்?’ என்றேன் நான்.

‘பெரிய மனிதராகத்தானிருக்க வேண்டும். இருபத்தேழாயிரம் பெறுமான கார். கையில் விலையுர்ந்த சிகரெட் பெட்டி. வண்ணான் மடிப்புக் கலையாத வேஷ்டி, ஜரிகை அங்கவஸ்திரம். ஆள் மிகவும் அந்தஸ்துள்ளவராகத் தானேயிருக்கிறார். பார்த்தால் பெரிய மனிதராகத்தானேயிருக்கிறது” என்றார்.

‘ஐயா, இவர் மிகவும் சின்ன மனிதர். இவர் எப்படிப்பட்ட பேர்வழி தெரியுமா? தப்பான எந்தக் காரியத்தையும் கூசாமல் செய்வதில் அசகாயகுரர். அந்தக்கார்மார்வாரிகடையில் மாதாமாதம் தவணைக்கு கடன் வாங்கிய கார். கட்டியிருக்கும் வேஷ்டி இவருடையதுதானா என்பது சந்தேகம். ஆனால் வெளிச்சம் போடுவதில் மன்னன். பேச்சிலே வானத்தை வில்லாக

83