பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————எழுத்து - சி.சு. செல்லப்பா

எனக்கு மிகவும் ராசியான வீடு. இந்த வீட்டிற்குள் கால் வைத்தவுடன் தான் எனக்கு நல்ல காலம் ஆரம்பமாயிற்று’ என்று பெருமையாகச் சொல்கிறேன்.

‘அப்பொழுது கொடுப்பதாக எண்ணம் இல்லையே’ என்கிறார் வந்தவர். நான் யோசிப்பது போல் சிறிது நேரம் பேசாமல் இருந்துவிட்டு, “ஆமாம் உடனடித் தேவை ஒன்றுமில்லை. இருந்தாலும் நல்ல விலையாக வந்தால் அதைப் பற்றி யோசிக்கலாம்’. என்கிறேன்.

“என்ன விலையென்றால் கொடுக்கலாம். ஒரு உத்தேசம் சொன்னால் யோசித்துப் பார்க்கலாமே.”

மறுபடியும் ஒரு விநாடி யோசித்துவிட்டு ஐம்பத்தை யாயிரம் கொடுப்பதென்றால் கொடுத்து விடுகிறேன் என்கிறேன்.

“சரி” என்று விடுகிறார் அச்சாபீஸ்காரர். அவருக்குத் தேவை இருப்பதால், அந்த விலை கொடுத்து வாங்க முன்வருகிறார். அதுதான் தேவை மதிப்பு (Utility Value).

இதுவரையில், நிலைமாறும்பொழுது மாறும் மதிப்பையும், ஒரு நிலையிலேயே வெவ்வெறு விதமான மதிப்புக்கள் ஒரு பொருளுக்கு ஏற்படுவதையும் பார்க்கிறோம். இந்த மதிப்பு அடிப்படையில் எதனால் உண்டாகிறது?

மனிதன் உலகத்தில் உள்ள ஒவ்வொரு பொருளையும் இரண்டுவிதமாக அறிகிறான். ஒன்று பொருளின் தன்மையை உணர்வது. மற்றொன்று அந்தப் பொருளுக்கும் தனக்கும் உள்ள தன்மையை அறிவது. ஒன்று தனக்குப்புறம்பான (Objective) அறிவு. மற்றொன்று தன்னுடன் சம்பந்தப்பட்ட (Subjective) உறவு. முதலாவதை (Fact) உண்மையென்றும், பிந்தியதை மதிப்பு (Value) என்றும் சொல்லலாம்.

நான் சிறுவயதிலிருந்து வசித்து வந்த ஊர் தண்ணிர் இல்லாத ஊர். பயிர்பச்சைகளைக் காண முடியாது. எங்கள் பூர்வீக கிராமம் அங்கிருந்து அறுபது மைலுக்கப்பாலுள்ளது. கிராமத்திலிருந்துவரும் உறவினர்களை எங்கள் பந்துக்கள் கிராமத்தில் மழை உண்டா’ என்று கேட்பார்கள். அவர்கள் உண்டு, இல்லை என்று சொல்வார்கள். பட்டினவாசியான எனக்கு வந்ததும் வராததுமா மழையின் மேல் ஏன்

86