பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————எழுத்து - சி.சு. செல்லப்பா



மனித தன்மையை வைத்துத்தேடப்படும் பயன்கள்

மனிதன் அனுபவத்திற்கு உணர்ச்சிகளை வைத்துக் கொண்டுதேடப்படும் பயன்கள் அழகு அனுபவங்கள் (Aesthetic Value).

மனிதன் நடத்தையை ஆதாரமாக வைத்துக்கொண்டு தேடப்படும் பயன்கள் தார்மீகப் பயன்கள் (Moral Value)

மனிதன் ஆன்மீக அடிப்படையில் தேடும் பயன்கள்(Spiritual Values)

இவைகள் எல்லாமே, மனிதன் தேடும் பயன்கள்தான். ஒவ்வொரு மனிதனிடமும் இவைகள் இருக்கத்தான் செய்கின்றன. சிலரிடம் பொருளாதாரப் பயன்தேட்டம் அதிகமாயிருக்கும். சிலரிடம் ஆன்மீகத் தேட்டம் அதிகமாயிருக்கும். இதுவே வித்தியாசம்.

இந்தப் பல்வேறு பயன்களையும் ஒவ்வொன்றாய் சீர்தூக்கிப் பார்க்கலாம்.