பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
இன்றைய தமிழ் இலக்கிய

விமர்சன தோரணை

சி.சு. செல்லப்பா

தற்கால தமிழ் இலக்கிய விமர்சனப் போக்கை, இதுவரையில் பிரசுரம் ஆகி இருக்கும் புஸ்தங்கள், சஞ்சிகைப் பக்கங்களில் வெளியாகி இருக்கும்கட்டுரைகள், பத்திரிக்கைகள், தினசரிகளின் பத்திகளை நிரப்பும் புத்தக விமர்சனங்கள், ஆகிய இவைகளிலிருந்துமட்டும் நிதானித்து மதித்து விட முடியாது. இலக்கியத்தை அணுகுவதில், ஊன்றிச் சொல்லும், பழங்கிடைப் பற்றுள்ள, அடம்பிடித்த, காலத்துக்கும் ஒவ்வாத முறைகளுக்கு எதிராக படைப்பாளர்களிடம் ஏற்பட்ட ஒரு அதைப்பு (Reaction) மூலம் வெளியானதற்போதைய மனப்போக்கை ஒருவன் கவனத்தில் கொண்டாக வேண்டும். இலக்கியத்தை ரசிப்பதற்கான தன்மை நமது முன்னோர் களுக்கு இருந்ததில்லை என்ற கருத்தை துச்சமாகத் தள்ளிவிடுவதற்குப் போதிய ஆதாரங்கள் இருக்கின்றன என்றாலும், ஒன்றை-இதை மட்டும் நாம் அப்படியே விழுங்கித்தான் ஆக வேண்டும். கலைகளில் கடைக்குட்டியாகிய இலக்கிய விமர்சனம், இன்று, நாம் அதைப் பற்றி கொண்டுள்ள முழு அர்த்தத்தில், முற்றிலும்மாறுபாடான ஒரு பயிற்சி முறையையும் செயல்வழியையும் தண்டிக் கேட்கிறது. இந்தக் கட்டுரையின் வீச்சு நோக்கம் தற்கால இலக்கியம் பற்றி மட்டும் கட்டுண்டு இருந்தாலும், தமிழ் தொன்மைக் காவியங்கள் சம்பந்தமாக முன்கால, இன்றைய, குணம் காண்கிறதோரணைபற்றிய ஒரு அறிமுகக்குறிப்பு விஷயத்தை வித்யாசத்தால் பார்த்து அறிவதற்கு நமக்கு உதவக்கூடியதாக இருக்கும்.

89