பக்கம்:எழுத்து உலகின் நட்சத்திரம்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(எடுத்துஉலகின் நட்சத்திரம் தீபம் நா.பார்த்தசாரதி) அவன் எப்படி இழக்க முடியும். நான் எந்தெந்த இடத்தில் திடுக்கிட்டேன், எந்தெந்த இடத்தில் இந்தத் தரங்கெட்ட ஆசாமிகளிடம் அருவருப்புக் கொண்டேன் என்பதை அடுத்து எழுதுகிறேன். நான் சாட்டுகிற குற்றங்கள் நீங்களும் வெறுக் கிறவைகளாகவே இருக்கும். நீங்களும் திடுக்கிடுகின்றவை களாகவே இருக்கும் அந்த ஊழல்கள். ‘. . . கால் நூற்றாண்டுக் காலத்திற்கு முன், அல்லது அதற்கும் முன், தேசிய உணர்ச்சி முறுகி எழுந்த காலத்தில், சுதந்திர வேட்கையும் சுதேசி எண்ணமும் எங்கும் பரவியிருந்த ஒரு வேளையில் - அவற்றையே புனித இலட்சியங்களாக முன் வைத்து ஒரு குடிசையில் மங்கலமாகக் குத்து விளக்கேற்றினால் போன்ற நிலையில் இந்தியப் பத்திரிகைத் தொழில் தொடங்கப் பட்டிருக்கலாம். ஆனால் அதெல்லாம் பழைய கதை. அவ்வாறு எளிமையாகவும், அமைதியாகவும் புனித இலட்சியத்தை முன் வைத்தும் தொடங்கப்பட்ட பத்திரிகைத் தொழில் படிப்படியாக இன்று எந்த நிலைக்கு வந்துவிட்டதென்று கவனிக்கலாம். பாரதியாரின் இந்தியாவும், திலகரின் கேசரியும், திரு.வி.க. வின் நவசக்தி'யும் எழுத்தாளர்களின் 'மணிக் கொடியும் பத்திரிகைகளாக நடத்தப்பட்ட காலத்துஅடிப்படை இலட்சியங் களும், நோக்கங்களும், வேறு. இன்றைய நோக்கங்கள் வேறு. செலவும், வரவும், குவிகின்ற இலாபமுமே பெரியதாகத் தோன்றாமல் வேறு சில இலட்சியங்களும் முன் நின்று பெரியதாகத் தோன்றிய காலம் அது. அன்று பத்திரிகைகளின் ஆன்மா அதன் எழுத்தில் நிறைந்திருந்த சத்திய ஆவேசத்திலும் தார்மீக உணர்ச்சியிலும் இருந்தது. இன்று போல வெறும் பணத்திலும் அதிகாரத்திலும் அது அன்று இல்லை. இன்றைய தமிழ்ப் பத்திரிகைகள் ஆசிரியர் குழுவிலிருப்பவர்களுக்கு ஒரு விதமான சுதந்திரமும் இல்லை. உரிமைகளும் கிடையாது. திரு.வி.க. வை. கோவிந்தன், ஜீவானந்தம் ப்ோன்றவர்கள் பத்திரிகைகளை வளர்த்த வளத்தில் எத்துணைக்கு எத்துணை உரிமை வேட்கையும் மனிதாபிமானமும் நிறைந்திருந்தனவோ அத்துணைக்கு அத்துணை இன்று கூலிகளாய்ப் பஞ்சைகளாய்த் தமிழ்ப் பத்திரிகைகளின் ஆசிரியர் குழுவில் - அல்லது அந்தப் பெயரில் நிர்வகிக்கப்படுகின்ற ஒர் அடிமைப் பண்ணையில் - சிலர் திண்டாடுகிறார்கள். உதாரணத்திற்கு ஒன்று பார்க்கலாம்.