பக்கம்:எழுத்து உலகின் நட்சத்திரம்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

( வல்லிக்கண்ணன் - - { 87) கடந்த பத்து வருடங்களில் சிந்தனைக்கு விருந்தளிக்கும் சிறந்த வாரப்பத்திரிகை... -என்று தனக்குத்தானே பிரகடன்ப்படுத்திக் கொள்ளும் ஒருவாரப் பத்திரிகையில் - ஆசிரியர் குழுவைச் சேர்ந்த ஒரு பதின்மரும், ஒவியர்களில் ஓர் ஐவர் அல்லது அறுவரும்-விலக்கப்படுதல், பழிவாங்கப்படுதல்-வஞ்சகமாக மோசம் செய்யப்படுதல் போன்ற விதங்களில் தொடர்ந்து காயடிக்கப்பட்டிருக்கிறாாகள். ஆனாலும் தமிழ் மக்கள் அந்தப் பத்திரிகையை இன்னும் படிக்கிறார்கள். - - இன்னார் நேற்றிலிருந்து அந்தப்பத்திரிகையில் இல்லையா மே. காரியாலயச்சார்பில் அவருடைய வீட்டில் வைக்கப்பட்டி ருந்த டெலிபோனைக் கூட அறுத்து எடுத்துக் கொண்டு ப்ோய்விட்டார்களாமே...மேஜை நாற்காலிகளைக்கூட ஒழித்து எடுத்துக் கொண்டு போய்விட்டார்களர்மே...- என்று அந்தக் காரியாலயத்தைப் பற்றி ஒரு செய்தியாய் இரண்டொரு மாதங்க ளுக்குக்குறையாமல் நிரந்தரஅமங்கல நியூஸ் இருந்து கொண்டே இருக்கும். தமிழ்ப் பத்திரிகை உலகில் அற்பத்தனமான மனப் பான்மையுள்ள சிலர் பத்திரிகை முதலாளிகளாக இருப்பதால் தங்களுக்கு வேண்டாதவர்கள் என்று கருதப்படுகிறவர்களை மிகமிக நயவஞ்சகமாக-ஓநாய்த்தனமாகப் பழிவாங்குவார்கள். தங்கள் பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் பணிபுரிய ஒரு புத்திசாலியை-நாசூக்காகவிலைபேசும்போது அந்த உத்தியோக நியமனபேரம் கீழ்க்கண்ட விதமாக ஆரம்பமாகும். 'உங்க ஸெர்வீஸ் நம் எஸ்டாபிளிஸ்மெண்டிற்கும் ரொம்ப அவசியம்னு நினைக்கிறோம் ஆபிஸ் செலவிலேயே நீங்க குடியிருக்கிறதற்கு வசதியா ஒரு வீடு பார்த்தாச்சு. அங்கே ஒரு டெலிபோனும் வைப்பதற்கு ஏற்பாடு செய்திருக்கோம். இனிமேல் நாமெல்லோரும் ஒரேகுடும்பம் மாதிரி- : இப்படி விரிக்கிற வலை-எப்போதும் ஒரேமாதிரித்தான் முடியும். உறவே முறிந்து ஆளைப் பழிவாங்க வேண்டுமென்று அவர்கள் முடிவு செய்ததும், டெலிபோனை அறுப்பார்கள். வீட்டைக் காலி செய்யச் சொல்லி ஏற்பாடாகும். முதல் நாள் வரை காரில் போய்வர் ஏற் பாடுகளும் எடுபிடி ஆட்களும் காத்திருந்த நிலையைத் திடீரென்று சொல்லாமல் கொள்ளாமல் இரத்து செய்து-நாலு வேருக்கு முன் அலட்சியம் செய்வார்கள். தீரனான பத்திரிகையாளன் என்பவன்-தன்னை வேலைவாங்கு