பக்கம்:எழுத்து உலகின் நட்சத்திரம்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

G88) எழுத்து உலகின் நட்சத்திரம்'தீபம்' நா. பார்த்தசாதி) கிற ஆளின் செளகரிய மயக்கங்களை அறவே புறக்கணித்தா லொழிய இன்று தமிழகத்தில் நிமிர்ந்து நடக்க (Լք ւգ Այո5/. ஒவ்வொரு பத்திரிகை அலுவலகத்திலும், எழுதும் திறமை, மனச்சாட்சி, மனோதர்மம் - இவை இல்லாத ஆட்கள் பலர் - இவையெல்லாம் உள்ள நல்லவர்களாக அங்கு பணிபுரியும் சிலரைப் பற்றிக் கோள் சொல்லுதல், சிண்டு முடிதல் போன்ற திருப்பணிகளுக்காக்வே தொடர்ந்து இருப்பார்கள். வெளிப்பார்வைக்கு இவர்கள் மெய்யெலாம் திருநீறு பூசி வாய்க்குவாய் - பரமஹம்ச விவேகாநந்த சாரங்களை விதந்து பேசிப் பரம அப்பாவிகளாய்-ஆசாரசீலர்களாய் தோற்றுவார்கள். ஆனால் உள்ளமோ நஞ்சுமயமாய் இருக்கும். இவர்களுடைய பக்தி இவர்களுக்கு ஒரு கவசம் அல்லது போர்வை. அசல் வாழ்வில் - உள் அந்தரங்கத்தில் இவர்களின் சிலர் காட்டிக் கொடுக்கிறவர்களாகவும் கூட்டிக் கொடுக்கிறவர்களாகவும் இருப்பார்கள். ஆனால் முட்டாள் உலகத்தின் கண்களுக்கு இவர்களுடைய பக்திதான் தெரியுமே தவிர களங்கக் கறைகள் தெரியாது. - - பத்திரிகையின் விற்பனையாகாத பழம் பிரதிகளை ஒரு கணக்கிலும் சேர்க்காம்ல் நிறுத்து எடை தூக்கி ஆயிரக் கணக்கில் பணம் வாங்கிப் பைக்குள் போடுவதில் கவனமாக இருப்பார் ஒரு டைரக்டர். பைண்டிங்கில் 'கட் ஆகி விழும் ஜெல்லி காகிதத்தை விற்றுச் சுருட்டுவதில் மும்முரமாக இருப்பார் ஒரு டைரக்டர். முதலாளிகளுக்குக் கால் கை பிடிக்கிற ஆட்கள் கூட சில கம்பெனிகளில் திடீரென்று டைரக்டர்கள் ஆகி இரகசியங்களைக் காப்பாற்றுவதும் உண்டு. இப்படிப்பட்ட சில கம்பெனிகளில் தெரிந்தோ தெரியாமலோ அரசாங்க முதலீடாகிய இன்ஷ்யூரன்ஸ் பங்குகளும் கூட இருக்கும். . இந்தக்காரியாலயத்திற்கு வேண்டிய ஓர்அரசியல் தலைவர் -மாலை வேளைகளில் வருவார். அவர் வருகிற நேரம் பார்த்துபெரியகம்பெனிகளில் பங்குதாரர்களாகிய சில வியாபாரிகளும் அவரைக்கானவருமாறு அழைக்கப்படுவார்கள். இவர்களுடைய சந்திப்பில் (சந்திக்க வைக்கும் ஏற்பாட்டில்) பத்திரிகை முதலாளி பயனடைவார். அரசியல் தலைவர் பெயரைச் சொல்லி ஹி யூஸ்டு டு கம் எவ்வரி ஈவினிங்..... இஸ் வெரி ஈகர் டு nயூ - என்று அரசியல் தலைவருக்குச் சொல்லப்படும். இந்த இருவர்