பக்கம்:எழுத்து உலகின் நட்சத்திரம்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் - - —(£9) சந்திப்பில் பயனடகிறவர் பத்திரிகைக்காரராக இருக்கிற தேசம் இது. திலகரும், பாரதியாரும் பத்திரிகை நடத்திய தேசத்தில் இன்று பிம்ப்' வேலை (பரிதாபம் பரிதாபம் வெட்கம் ! வெட்கம் ! ) செய்கிறவன் எல்லாம் இலட்சக்கணக்கில் பத்திரிகை விற்று விடுகிறான். - சமீபத்தில் சென்னையில் பத்திரிகை - எழுத்துலக ஜாம்பவானாகிய பி.எஸ். ராமையா என்கிற சிறந்த எழுத்தாளரின் மணிவிழா நடந்தது. அப்போது அவர் தொடர்ந்து ஓராண்டுக்கு மேல் விடாது சிறுகதைகள்எழுதி வளர்த்த இரண்டு வாரஇதழ்களின் ஆசிரிய முதலாளிகள் அந்த விழாக் கூட்டத்துக் காவது போனால் போகிறதென்று வந்திருக்கிறார்களா என்று நான் கூர்ந்து கவனித்து ஏமாந்தேன். தமிழ் எழுத்தாளனும், பத்திரிகையாளனும் தன்மேல் விசுவாசமில்லாத அதே சமயத்தில் தான் மட்டும் விக்வாசமாயிருக்க வேண்டுமென்று எதிர்பார்க்கப படுகிற ஒரு முதலைக்கூட்டத்துக்கு உழைப்பதாக அன்று எனக்குத் தோன்றியது. எந்த எழுத்தாளன் பாராட்டப்படுவதிலும் -பத்திரிகை முதலாளிமார்களுக்கு மனப்பூர்வமான சந்தோஷமோ, திருப்தியோ கிடையாது. - சில பத்திரிகை முதலாளிகள் தாங்களும், தங்களுடைய புத்திர பாக்கியங்களும் கிண்டி ரேசுக்கும் போகும் போது எந்த நம்பருள்ள குதிரை ஜெயிக்கும் என்று ஜோஸியம் சொல்லுகிற சோதிடர்களைத் தங்கள் தினசரி இதழில் உதவியாசிரியர்களாக வைத்திருக்கும் விநோத இரகசியம் கூடத் தமிழ்த் திருநாட்டில் இங்கு உண்டு. உத்தியோகம் சோதிடம், நியமனம் உதவியாசிரி யர் வேலை. இன்னும் சில பத்திரிகைகளில் முதலாளிகளுக்கு வேண்டிய "ஸ்நாஃப்'களின் கலியான போட்டோ, கருமாதி போட்டோ டான்ஸ் அரங்கேற்றம், வெளிநாட்டுப்பயண விவரம் இவற்றைப் போடுவதில் ஒத்துழைப்பவர்கள் தான் ஆசிரியர் குழுவில் இருக்க முடியும். இன்னும் சில பத்திரிகைகளில் முதலாளிமாரின் காதற் கிழத்தியர் அல்லது காமப் பரத்தையர் போல் ஆசிரியர்குழுவிலுள்ளோர்அலையவேண்டும். முதலாளி தீஷதர்களின் காலில் விழுந்தால் இவர்களும் ஒடி விழ வேண்டும், முதலாளி ஏதாவது ஹோமம் பண்ணி ஊரைஏய்த்து வேஷம் போட்டால் இவர்களும் போட வேண்டும். மனோதர்மம்,புத்தியின் பெருமிதம், பத்திரிகைத் தொழிலுக்கு