பக்கம்:எழுத்து உலகின் நட்சத்திரம்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இ)-(எழுத்து உலகின் நட்சத்திரம் தீபம்' நா. பார்த்தசாதி) வேண்டுமென்று நீங்கள் நினைத்தால் உங்களுக்கு இங்குள்ள நிலை புரியவில்லை என்றுதான் அர்த்தம். இந்தச்சூழ்நிலையை உங்களுக்குச் சொல்லியபின் இனி இங்குள்ள பத்திரிகையாளரின் தராதரம் பற்றியும்-இவர்களுக்குள்ள இடையூறுகள் பற்றியும்இவர்களில் நல்லவர்களைப் பழிவாங்கமுயலும் நயவஞ்சர்கள் பற்றியும் படிப்படியாகக் கூற முடியும். ஒருவேளை இதிலுள்ள ஊழல்கள் எல் லாம் தமிழ் வாசகர்களுக்கு முன் என்னால் விளக்கப்பட்ட பின்பு இந்த விஷயத்தில் அவர்கள் கண்கள் திறந்து நல்லது கெட்டதைப் பகுத்து உணருவார்களோ என்னவோ? நான் மிகவும் நயவஞ்சகமாகவும் சூழ்ச்சிக்கு ஆளாகியும் வேலை நீக்கப்பட்டதற்கு ஒரு மாதம் முன்னால், திருச்சியி லிருந்து வெளிவரும் ஒரு மாத இதழில் 'இன்றைய தமிழ் எழுத்தாளனின் அசெளகரியங்கள் - என்ற தலைப்பிலே துணிவுடன் ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். என்னை வெளி யேற்றுவதில்-பத்திரிகை முதலாளிகளுடன் ஒத்துழைத்து சகல ஏற்பாடுகளையும் செய்த ஒர் எழுத்தாளர் - மேற்படி கட்டுரையை எடுத்துப்போய்ச் சில பகுதிகளைக் குறிப்பிட்டுக் காண்பித்து மேலிடத்தார் மனத்தை மாற்றினாராம். வாசக நேயர்களின் வசதிக்காக அந்தத் திருச்சிராப்பள்ளி மாத இதழில் வந்த கட்டுரையைக் கீழே அப்படியே தருகிறேன். 'இன்றைய தமிழ் எழுத்தாளனின் செளசகரியங்கள் அல்லது 'செளகரியக் குறைவுகள் என்று அமைத்திருக்கக் கூடாதா? என்பதாக இதைப் படிக்கிறவர்களுக்கு ஒருகேள்வி கேட்கத் தோன்றும். கேட்கத் தோன்றுவது நியாயமாயிருக்க லாமே ஒழிய அப்படிக் கேட்பது நியாயமாயிருக்க முடியாது. 'செளகரியங்கள் - என்று தலைப்பில் வந்திருந்தால் இன்றைய தமிழ் எழுத்தாளனுக்கு ஏதோ செளகரியங்கள் இருப்பதாக நாமே ஒப்புக் கொண்டு விட்டாற் போலத் தோன்றும். செளகரியக் குறைவுகள்- என்று தலைப்பில் வந்திருந்தாலோ இன்றைய தமிழ் எழுத்தாளனுக்கு சில செளகரியங்களோடு சில குறைகளும் இருக்கின்றன எனத் தோன்றும். அசெளகரியங்கள் மட்டுமே நிறைய இருப்பதாகச்சொல்லவிரும்புகிற இந்தக்கட்டுரையின் நோக்கத்துக்குப் பழுது வராத வண்ணம் மேற்படிதலைப்பையே தேர்ந்தெடுக்க நேர்ந்தது. தொல்காப்பி யரும்.திருவள்ளுவரும், கம்பரும் இலக்கிய இலக்கணங்களைப் படைத்த காலத்தில்,