பக்கம்:எழுத்து உலகின் நட்சத்திரம்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ī} - —GID இத்தனை விதமான காப்பிர்ைட், ராயல்டி, தொந்தரவுகளும், - அபிப்ராய பேதங்களும்,அவர்களைப் பாதித்திருக்க நியாயமில்லை. அவர்களுடைய அமரஇலக்கண இலக்கியங்கள் அவர்களே எழுதிய - அல்லது அவர்களுடைய அருமை மாணாக்கர்கள்-எழுதிய ஏட்டுச்சுவடிகளிலிருந்து பிரதி செய்து கொள்ளப்பட்டோ - மனனம் செய்யப்பட்டோ பரவின. இன்றைய இலக்கிய கர்த்தாவோ தன் படைப்பை ஓராயிரம் பிரதிகள் அச்சிடுவதற்குத் தகுந்த பதிப்பாளரைத் தேடுவதி லிருந்து ஒவ்வொரு முயற்சியிலும் படிப்படியான சிரமங்களை அடையவேண்டியவனாகி இருக்கிறான். தான் எந்த தமிழ் ம்ொழியில் எழுதுகிறானோ, அதே தமிழைத் தாய் மொழியாக 'வுடைய படிப்பறிவுள்ள மக்கள் ஆங்கிலப்புத்தகங்களில்மோகங் கொண்டு-தமிழ்வெளியீடுகளையும், புத்தகங்களையும் புறக்கணிப் பதையும், அலட்சியப்படுத்து வதையும் பார்த்துச் சகித்துக் கொள்வதுடன் அதை ஒரளவு மன்னிக்க வேண்டிய தர்மசங்கட மான நிலைமையும் இன்றைய தமிழ் எழுத்தாளனுக்கு இருக்கிறது. t . இன்றைய தமிழ் எழுத்தாளனின் அசெளகரியங்கள் மூன்று கோணங்களில் அவனை நோக்கி வருகின்றன. முதலாவது பத்திரிகைகளிலும் இரண்டாவது வெளியீடுகளிலும் அவன் அடைகிற அசெளகரியங்கள். மூன்றாவதுஇந்த நூற்றாண்டின் ஐசுவரிய மோகினியும் ஜனரஞ்சக ராணியுமாகிய சினிமாச் சிங்காரியினால் அவன் அடைகிற அவமானங்கள். இந்த மூன்று துறைகளிலிருந்தும் தமிழ் எழுத்தாளன் ஏதாவது சில செளகரியங்களையும் அடையலாமல்லவா? என்று நீங்கள் கேட்க் நினைப்பீர்கள். ஆனால் இந்த மூன்று துறையிலிருந்தும் ஒரு தமிழ் எழுத்தாளன் அடைகிற செளகரியங்களைக்காட்டிலும் அசெளகரியங்களே அதிகமாகவும், கடுமையாகவும் இருப்பதால், செளகரியங்களை ஒரு பொருட்டாக மதித்துக் கணிக்க வழி யில்லாமல் போகிறது. ஏறத்தாழ மூன்றரைக் கோடி அல்லது நாலரைக்கோடி எண்ணிக்கையுள்ள தமிழர்கள் பர்மா, மலாயா, இலங்கை, தென்னாப்பிரிக்காஉள்பட பல இடங்களில் பரவிக்கிடக்கிறார் கள். ஆயினும், ஓர் தமிழ் எழுத்தாளனின் இலாப நஷ்டக் கண்ணோட்டத்துடனே பார்த்தால் - இந்த நாலரைக்கோடி