பக்கம்:எழுத்து உலகின் நட்சத்திரம்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(ਫ੍ਰੀ-( எழுத்து உலகின் நட்சத்திரம்'தீபம்' நா.பார்த்தசாரதி D - மக்களடங்கிய மொழி சிறுபான்மையினர்பேசும் சிறுபான்மை வசதிகளடங்கிய சிறிய மொழியாகவே தோன்றுகிறதெனலாம். தமிழினத்தைச் சேர்ந்த - உயர் வர்க்கத்தாரும், உயர் மத்தியதரவர்க்கத்தாரும் தங்கள்வீட்டிலுள்ள சமையற்காரர்கள், கார் டிரைவர்,வேலைக்காரர்கள் படிப்பதற்காகத்தான் தமிழ்ப் பத்திரிகைகளையும், வெளியீடுகளையும், உள்ளே நுழைய விடுகிற பாவத்தைச் செய்ய வேண்டியிருக்கிறதென்று நினைக் கிறார்கள். தாய்மொழி, தாய் மொழிப் பத்திரிகைகள் தாய் மொழி எழுத்தாளர்கள், தாய்மொழி இலக்கியம் என்கிற கோணத்தில் இந்த உயர் வர்க்கத்தாரிடமும், உயர் மத்திய தர வர்க்கத்தாரிடமும், தேசிய உணர்ச்சி, சுயாபிமானம், எல்லாம் பூஜ்யமாகவே இருக்கிறது. மில் தொழிலாளி முனிசாமிக்கும், அட்டெண்டர்.அங்கப்பனுக்கும், புதுமைப்பித்தனைப்பற்றியோ, திரு.வி.க.வைப் பற்றியோ தெரிந்திருக்கும். அதே சமயத்தில் அரங்கநாதன் ஐ.லி.எஸ்.ஸ்"க்கும், மானேஜிங் டைரக்டர் மார்க்கசாயத்துக்கும்.ஆங்கில பாஷையின் அடிமட்டத்திலிருக்கும் ஏழாந்தர, எட்டாந்தர ஆசிரியனைக் கூடத் தெரிந்திருக்குமே ஒழியச் சுய பாஷையின் முதல்தரமான ஒரிரு ஆசிரியர்களின் பெயர்கள்கூடத் தெரிந்திருக்காது. இந்த நிலை கடந்த பத்தாண்டு களில் ஒரளவு மாறியிருக்கிறது என்றாலும் இன்னும் நன்றாக இன்னும் விரும்பத்தக்க விதத்திலே மாறி வளரவேண்டும். சொந்த பாஷையில் நன்றாகப் பேசத் தெரியாமலும் அரை குறைகளாக இருப்பதையே இன்னும் கெளரவமாகக்கொண்டாடிக் கொள்கிற 'பெரிய மனுஷாள் இங்கே இருக்கிறார்கள். தேவன், கல்கி கிருஷ்ணமூர்த்தி, கி.வா.ஜ. ப்ோல் எழுத்தாண்மையும் y தகுதியுமுள்ளவர்கள், ஆசிரிய பீடத்தில் அமர்ந்து செங்கோல் நடத்திய காலம் போக, இரண்டொரு வாக்கியங்கள் கூட எழுதத் தெரியாத - பத்திரிகை முதலாளிகளே - செளகரியத்துக்காவும், கெளரவத்துக்காவும் - ஆசிரியராகிற அல்லது அந்த முதலாளி மார்களின்பிள்ளைகளோ, மாப்பிள்ளைகளோ, மைத்துனர்களோ அந்தப் பதவிக்கு வாரிசாக்கப்படுகிற பரிதாபகரமான நிலை இங்கே இருப்பதைக் காண்கிறோம். இதனால் இலக்கிய வர்க்கம் என்கிற ஒரு வலிமைவாய்ந்த இனம் உருவாகாமல் தனித்தனியாக சிதறிக்கிடக்கிற தமிழ் எழுத்தாளர்களின் சக்தியும் திறமையும் வீணாகிறது.