பக்கம்:எழுத்து உலகின் நட்சத்திரம்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- வல்லிக்கண்ணன் } (93) அவர்களுடைய உழைப்பும். திறமையும் மிகவும் மலிவான விலைக்கு வாங்கப்படுகின்றன. இன்ன எழுத்தாளர் எழுதுவதனால் இந்தப்பத்திரிகை விற்கிறது-இன்ன எழுத்தாளர் எழுதுவதனால் இந்தப் பத்திரிகைக்கு மதிப்பு என்று எழுத்தாளர்கள் பத்திரின்கக்கு 'குட் வில் சம்பாதித்துக் கொடுக்கிற நிலை வரவேண்டும். அப்படி நிலை இருந்தாலும் - தமிழ்ப் பத்திரிகை முதலாளிகள் அதை மறைத்துவிட முயல்வார்கள். . எம்.ஜி.ஆர். மாறு வேடங்களில் நடித்த எட்டுப் படங்கள் யாவை? சிவாஜி கணேசன் சீறிக் கொதித்து வசனம் பேசிய செந்தமிழ்த் திரை ஓவியங்கள் என்னென்ன..." என்று நேயர்களின் சினிமா ஞானத்துக்குக் கேள்விபோட்டு-எண்பதாம் பக்கத்தில் விடை தலைகீழாகப் பிரசுரிக்கப்பட்டிருப்பதாய்ப் பெருமைப் படுகிற ஒரு பத்திரிகையும், ஆட்டுக்குட்டி,கோழி, குயில், மயில், கழுதை, குதிரை எருமை இவைகளைப்பற்றி எந்தெந்தத் தமிழ்த்திரைப்படத்தில் பாடல்கள் வருகின்றன என்ற மாபெரும் உண்மையை ஆராய்ந்து தொகுத்து வாசகர்களுக்கு அளித்து திரைத் துணுக்கு நல்கும் ஒரு செந்தமிழ் ஏடும், பாதாம் அல்வா, டீ, சுண்டல், முறுக்கு இவைகளை விற்பதாக எந்தெந்த நடிகர்கள் எந்தெந்தப் படத்தில் வேஷம் போட்டிருக்கிறார்கள் என்ற பேருண்மையைக் கண்டுபிடித்து சொல்லும் ஒரு பத்திரிகையுமாக, சினிமாவுக்கு மாலிஷ் போடும் கைங்கரியத் தில் இறங்கியிருக்கும் தமிழ்ப் பத்திரிகைகளை இப்போது அதிகமாகப் பார்க்கிறோம். உண்மைக் கதை என்ற பெயரிலும் பல ஆங்கிலக் குப்பைகளை அப்படியே மொழிபெயர்த்துத் தள்ளுகிறார்கள். பத்திரிகை எந்த பாஷையில் வெளிவருகிறதோ அந்த பாஷையிலேயே சுயமாகக் கதை எழுதுகிறவர்களும், இலக்கிய விற்பன்னர்களும் நிறைந்திருக்கும் போது முழுக்க முழுக்க ஆங்கிலத்திலிருந்தோ, இந்தியிலிருந்த்ோ என்பது போல் அறிவிக்கும் பாணியில் அது மூலத்திலிருந்து மொழி பெயர்த்தது தான் என்பதை ஒத்த வாக்கியமொன்றை அந்தக் கட்டுரையின் முகப்பில் சேர்த்திருப்பார்கள். மைனாரிட்டி மொழியினருக்குள்ளதாழ்வு மனப்பான்மைக்கும் மெஜாரிட்டி மொழியினருக்குள்ள உயர்வு மனப்பான்மைக்கும் எத்தனை வித்தியாசம் பாருங்கள்! - *