பக்கம்:எழுத்து உலகின் நட்சத்திரம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாட்கள் நடைபெற்றன. இத்திருமணத்திற்கு குறிஞ்சிபாபு, குறிஞ்சி வேலன், அமெரிக்கதுதரகத்தில் பணியாற்றிய நடராஜன், மேத்தா, மு.வேலாயுதம், சேவற்கொடியோன்போன்ற நெருங்கிய இலக்கிய நண்பர்கள்கலந்து கொண்டார்கள். இந்ததிருமணத்திற்குகலைஞர், ஆற்காடு வீராசாமி, திருமதி எம்.எஸ். சுப்புலட்சுமி, முன்னாள் முதல்வர் பக்தவத்சலம் வந்து வாழ்த்துத்துகிறார்கள். 1982ம் ஆண்டு ஜனவரி மாதம் தைப்பூசத்திருநாளைகடலூர்திருப்பாதிரிப்புலியூர், ஞானியாரடிகள், மடத்தில் நடைபெற்ற ஐந்தாம் குருநாதரர்கிய ஞானியாரடிகள் குருபூசையில் கொண்டு ஞானியாரடிகளின் தமிழ் பணியின் பெருமைகளை விரிவாக இரண்டு மணி நேரம் சொற்பொழிவு ஆற்றினார். இக்கூட்டத்தில் புலவர்.வெ.புகழேந்தி கலந்துக் கொண்டார். அன்று பகல், இரவு எனது துணைவியாரின் தாய் வீட்டில் தங்கினார். நீண்ட நாட்களுக்குப் பிறகு கிணற்றில் வாளியில் தண்ணீர் இறைத்து ஆனந்தமாகக் குளித்தார். மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்பட்டார். இக்கூட்டத்தில் குறிஞ்சி வேலன், நடராஜன் போன்ற நண்பர்கள் நா.பா.வுடன் இருந்தனர். ஊருக்கு அருகிலுள்ள தேவனாம் பட்டிணம் திருமால் கோயிலுக்கு சென்று வந்தோம். . - 1984ம் ஆண்டு செகந்தராபாத்தில் விஜயாபதிப்பகம் சார்பில் மு.வேலாயுதம் புத்தகக் கண்காட்சியை 10 நாட்கள் நடத்தினார். அதை தொடங்கி வைக்க நா.பார்த்தசாரதி வந்தார். நானும் சென்று இருந்தேன். இங்கு நடைபெற்ற இலக்கியக் கூட்டங்களில் திரு.சுஜாதா, திருப்பூர் சுப்ரபாரதி மணியன், திருமதி. அனுராதா ரமணன் போன்ற எழுத்தாளர்கள்பங்குகொண்டனர். அப்பொழுது தான் திருப்பூர் கிருஷ்ணனுக்கு ஐதராபாத்தில் பெண் பார்த்து திருமணத்தை நிச்சயப்படுத்தினார் நா.பா. - 15-11-1987 ஆம் ஆண்டு மலேசியாவில் 6வது உலக தமிழ் மாநாடு மலேசியா அமைச்சர் டத்தோ சாமிவேலு தலைமையில் நடை பெற்றது. இம்மகா நாட்டைதலைவர் கலைஞர் ஆய்வரங் கங்களை துவக்கி வைத்து பேருரை ஆற்றினார். இரண்டு நாள் கழித்து தலைவர் கலைஞர் சென்னைக்குத் திரும்பி விடுகிறார். இரண்டு நாட்களுக்கும் பிறகு நா.பார்த்தசாரதி உலகத் தமிழ் மாநாட்டில் கலந்து கொள்ளதலைவர் கலைஞரை சந்தித்துவிட்டு மலேசியா செல்கிறார். மாநாட்டில் கலந்து கொண்டும், நண்பர்கள் வீட்டிற்கு சென்று நண்பர்களைப் பார்த்து விட்டு டிசம்பர்