பக்கம்:எழுத்து உலகின் நட்சத்திரம்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o எழுத்து உலகின் நட்சத்திரம்'தீபம்' நா. பார்த்தசாரதி CŞā) ழுத கழித்து ஈவு வைத்தால் பன்னிரண்டு மாதம் அல்லது பதினைந்து மாதம் ஒர் எழுத்தாளன் சுமாராக வாழ்க்கை நடத்துவதற்குக் கூடப் போதுமான தொகையாக அது இரர்து. --- ஏழை இனமாகிய எழுத்தாளர் இனத்தின் இந்தப் புத்தக வெளியீட்டுத் தொழிலுக்கும், விற்பனைக்கும் கூட இப்போது வேறு ஒரு விதமான போட்டி முளைத்திருக்கிறது. இந்தத் துறைக்குச் சிறிதும் தொடர்பில்லாத அரசியல் செல்வாக்கும் சந்தர்ப்ப சூழ்ச்சிகளும் இப்போது இதனுள்ளும் ஓரளவு புகுந்திருக்கின்றன. பல பொதுக் கூட்டங்களிலும், திறப்பு விழாக்களிலும், முன் தயாரிப்பில்லாமலும், கருத்துச் செறிவில்லாமலும் தங்களுக்குத் தோன்றுகிறபடி மந்திரிகளும், பிரமுகர்களும் பேசுகிற பேச்சுக்களைக் குறிப்பெடுத்துக் கட்டுரைபோலாக்கி அவற்றையும் புத்தகமாகத் தொகுத்து அந்த மந்திரிகள் பேரிலும், பிரமுகர்கள் பேரிலும் விலை வைத்து விற்பனைக்கு அனுப்புகிறார்கள். சிருஷ்டித் திறன் ஒன்றையே பலமாக வைத்துக்கொண்டு இலக்கியம் படைத்து வைத்திருக்கிற எழுத்தாளனின் புத்தகமும், மந்திரியின் பேரோடும், பிரமுகரின் பேரோடும் செல்வாக்கைப் பலமாகக் கொண்டு வெளியாகிற் புத்தகமும் போட்டியிட்டால் லைப்ரரிக்காரர்கள் முதலிய எல்லாரும் மந்திரி பேரில் வந்திருக்கிற புத்தகத்தைத்தான் முதலில் வாங்கப் பார்ப்பார்கள். - அரை ரூபாய் விலையுள்ள புத்தகத்துக்கு ஆயிரம் ரூபாய் செலவழித்து வெளியீட்டு விழா வைப்பதன் மூலம் செல்வாக்கைத் தேடுகிறார்கள். பெர்ரி மாஸ்ானும், ஏர்ல் ஸ்டான்லி கார்டினரும் கூடக் கடல்கடந்து வந்து இரண்டொரு மாதங்களில் ஆயிரமும் - இரண்டாயிரமுமாகப் பிரதிகள் செலவழிக்கிற இந்த தமிழ் நாட்டில் - சுய பாஷையில் வெளியாகிற முதல் தரமான புத்தகம் கூட ஆயிரம் பிரரதி விற்றதென்ற கெளரவத்தை அடையப் பல மாதங்கள் அல்லது சில வருடங்கள் ஆகின்றன. புத்தகங்களை மதித்துப் பரிசுகள் வழங்குகிற மாநில மத்திய அரசாங்கங்களின் அம்ைப்புகளில் கூட ஒரு தலைப்பட்சம்ான தேர்வுகளும் அரசியல் அந்த ரங்கத்தைச் சேர்ந்த செல்வாக்குகளும் புகுந்து வேலை செய் வதாகச் சொல்லப்படுகிறது. ஐம்பது மில்லியன் பிரதிகள், நூறு மில்லியன் பிரதிகள் என்று பிரமிக்கத்தக்க விதத்திலே பிரதிகள்