பக்கம்:எழுத்து உலகின் நட்சத்திரம்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் ) - - - ( 97D விற்பனையாகி ற அகில உலக எழுத்தாளனின் நடுவில் வைத்துப் பார்க்கிற போது ஆயிரம் பிரதிகள் முக்கால் வருடத்திலும், முழு வருடத்திலுமாகத் தீர்கிற தமிழ் எழுத்தாளனின் இடம் மிகமிகச் சிறியது. ஆனாலும் இந்தச் சிறிய இடத்தில் கூடத் தமிழ் எழுத்தாளன் அடைகிற அசெளகரியங்கள் அதிகம். ஆயிரம் பிரதிகள் ஒரு வருடத்தில் விற்றாலும் - அப்படி விற்ற பிரதிகளில்எழுத்தாளருக்குச்சேரவேண்டிய ஊதியப் பகுதி வந்து சேர அதற்கப்புறமும் மூன்று வருடங்கள் பிடிக்கும். அப்படி வந்தாலும் முழுத் தொகையாகவேர், முழுப்பகுதி யாகவோ கிடைக்காது. முதற் பதிப்புத் தீர்ந்தபின் முறையான முன்னறிவிப்போடு - இரண்டாம் பதிப்பு'உரிய காலத்தில் வெளிவராது. பல நல்ல புத்தகங்கள் முதற்பதிப்போடு நின்று போவதும் உண்டு. சில புத்தகங்கள் முதற்பதிப்பு ஒரு பெயரிலும், இரண்டாம் பதிப்பு வேறொரு பெயரிலுமாக வெளிவந்து வாசகர்களை மருட்டும். சாதாரண மக்களின் கைக்கெட்ட முடியாத உயரத்துக்கு விலை வைக்கப்பட்டிருப் பதும் தமிழ்ப் புத்தகங்களின் குணாதிசயங்களில் ஒன்று. ஒரு வேளை விலை குறைவாக வைக்கப்பட்டால் கூடுதலான பிரதிகள் விற்பனையாகலாமோ என்னவோ? இப்படிச் சில காரணங் களாலே ஒரு தமிழ் எழுத்தாளன் வாழ்க்கைக்கு நிரந்தரமான வருவாயைத் தரும் மார்க்கமாகப் புத்தகப் பதிப்பையும் நம்புவதற்கில்லை. தன் புத்தகத்தைப் பதிப்பிப்பதைவிட எந்தப் புத்தகத்தை யாவது வியாபாரம் செய்தாலோ, கடை விரித்தாலோ கூட ஒரு தமிழ் எழுத்தாளனுக்கு அது இலாபகரமான தொழிலாயிருக்கும் பேர்ல் கப்பலில் தெரிகிறது. வந்து ஹார்பரில் இறங்கும் பத்து ஆங்கில நாவல்களை வாங்கிக் கடை விரித்தால் கிடைக்கிற கமிஷன் கூடச் சொந்தப் புத்தகத்தின் ராயல்டியை விடக்கூட இருக்கலாமென்று ஒரு தமிழ் எழுத்தாளன்.உறுதியாக நம்பலாம். ஒரு மைனாரிட்டி மொழியில் - அகில உலகக் கண்ணோட்டத் தில் மிகச் சிறியதாகிய் தமிழைப் போன்றதொரு மைனாரிட்டி மொழியில்எழுத்தாளனாயிருக்கிறவனுக்குப்புத்தகப் பதிப்பிலும் விற்பனையிலும் கூட இத்தனை அசெளகரியங்கள் உள்ளன. இனிமேல் திரைப்படத்துறையைப் பற்றிக் கவனிக்கலாம்: